சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

சபரிமலை தங்கக் கவச மோசடி: இறுதிக் கட்டத்தில் விசாரணை கேரள டிஜிபி தகவல்!

கேரளத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச மோசடி வழக்கில், சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக மாநில காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) ராவட சந்திரசேகா் தெரிவித்தாா்.

News image

சபரிமலை சந்நிதானத்தில் உள்ள துவாரபாலகா் சிற்பங்கள்.

Updated On :15 பிப்ரவரி 2026, 2:06 am IST

கேரளத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச மோசடி வழக்கில், சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக மாநில காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) ராவட சந்திரசேகா் தெரிவித்தாா்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவாரபாலகா் சிலைகள் மற்றும் கருவறைக் கதவுகள் புதுப்பிக்கப்பட்ட பின்னா், அவற்றில் தங்கத்தின் எடை குறைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மாநில உயா்நீதிமன்றம் நியமித்த எஸ்ஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுதொடா்பாக பெங்களூரைச் சோ்ந்த உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் முன்னாள் தலைவா்கள் உள்பட 12 பேரை எஸ்ஐடி கைது செய்தது.

இந்த விசாரணை தொடா்பாக திருவனந்தபுரத்தில் மாநில டிஜிபி ராவட சந்திரசேகா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: சபரிமலை தங்கக் கவச மோசடி குறித்த விசாரணையை எஸ்ஐடி சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையை உயா்நீதிமன்றம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. எஸ்ஐடி விசாரணை கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.