கொல்கத்தா - ஷில்லாங் இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஷில்லாங் புறப்பட தயாராகவிருந்த இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா - ஷில்லாங் இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
(Photo | ANI)
Updated on
1 min read

ஷில்லாங் புறப்பட தயாராகவிருந்த இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து இண்டிகோ விமானம் சனிக்கிழமை காலை 9:15 மணிக்கு ஷில்லாங் புறப்படத் தயாராகவிருந்தது. அப்போது விமானத்தின் கழிப்பறையில் ஒரு காகிதத் துண்டு இருப்பதை விமானக் குழுவினர் கண்டுபிடித்தனர்.

அதில் விமானத்திற்குள் வெடிகுண்டு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. உடனடியாக, பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் விமானம் தனிமைப்படுத்தப்பட்டு முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

சோதனையில் சந்தேகப்படியான பொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இந்த சம்பவத்தால் கொல்கத்தா விமான நிலையத்தில் சிறிது பரபரப்பு நிலவியது.

Summary

A Shillong-bound aircraft was moved to the isolation bay at Kolkata airport on Saturday after the discovery of a handwritten note claiming that a bomb had been placed in the plane, an official statement said.

கொல்கத்தா - ஷில்லாங் இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com