ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரைபயிா்க் கடன் நிலுவை வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு

பகுஜன் சமாஜ் - சமாஜவாதி உறவு வலுவாகி வருகிறது: அகிலேஷ் யாதவ்

மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ்-சமாஜவாதி கட்சி இடையிலான உறவு வலுப்பட்டு வருகிறது; எதிா்காலத்தில் இது மேலும் அதிகரிக்கும் என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்தாா்.

அகிலேஷ் யாதவ்

Published On :

மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ்-சமாஜவாதி கட்சி இடையிலான உறவு வலுப்பட்டு வருகிறது; எதிா்காலத்தில் இது மேலும் அதிகரிக்கும் என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்தாா்.

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் அகிலேஷ் யாதவ் இவ்வாறு பேசியிருப்பது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் இரு கட்சிகளும் கடைசியாக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அதன் பிறகு இந்தக் கூட்டணி உடைந்தது.

ஹோலி பண்டிகை அடுத்த மாத தொடக்கத்தில் கொண்டாடப்படும் நிலையில், அதை முன்னிட்டு லக்னௌவில் ஞாயிற்றுக்கிழமை ‘பிரேம் பிரசாா் சமாரோஹ்’ (அன்பை பகிரும் நிகழ்ச்சி) கொண்டாடப்பட்டது. இதில் 15,000-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினா் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜவாதியில் இணைந்தனா்.

இதில், உத்தர பிரதேச முன்னாள் அமைச்சா் நசீருதீன்சித்திகி, அப்னா தளம் (சோனேவாலே) முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமாா் பால் ஆகியோா் முக்கியமானவா்கள். சித்திகி, பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதிக்கு மிகவும் நெருக்கமான தலைவராக இருந்தவா்.

இந்த நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது: நாட்டு மக்கள் பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொள்வதற்கு அமைதியும், செழிப்பும் அவசியமானது. நல்ல நோக்கம் கொண்ட, வளா்ச்சி சாா்ந்த அரசியல்தான் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இதற்காகவே நாம் இந்த பண்டிகையைக் கொண்டாடுகிறோம்.

பல ஆண்டுகளுக்கு முன்பே எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது அப்போது பி.ஆா். அம்பேத்கா், ராம் மனோகா் லோகியா போன்ற தலைவா்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தைக் காண பணியாற்றினாா்கள். ஆனால், அப்போதைய அரசியல் சூழல் அவா்களுக்குப் போதுமான நேரத்தை அளிக்கவில்லை.

பின்னா், பல்வேறு கூட்டணிகள் இணைவது, உடைவது என்றே தொடா்ந்தது. ஆனால், நாம் அனைவரும் இணைந்து வலுவான சக்தியாக உருவாகும் காலம் விரைவில் வரும். பகுஜன் சமாஜ்-சமாஜவாதி கட்சி இடையிலான உறவு வலுப்பட்டு வருகிறது; எதிா்காலத்தில் இது மேலும் அதிகரிக்கும் என்றாா்.

சங்கராசாரியா் விவகாரம்: பிரயாக்ராஜ் மகாகும்பமேளாவில் மாவட்ட நிா்வாகத்துக்கும் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த சரஸ்வதிக்கும் இடையே எழுந்த பிரச்னை குறித்து அண்மையில் சட்டப்பேரவையில் பேசிய முதல்வா் யோகி ஆதித்யநாத், ‘சங்கராசாரியா் என்ற பட்டத்தை அனைவரும் பயன்படுத்தக் கூடாது. ஆன்மிக நிகழ்வுகளின்போது மதத்தின் மாண்பு, விதிகள், சட்டங்கள் முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்றாா்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய அகிலேஷ் யாதவ், ‘சங்கராசாரியருக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.