வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) மூலம் குடியுரிமையைப் பறிக்க பாஜக முயற்சிக்கிறது என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி குற்றஞ்சாட்டினாா்.
ஹைதராபாதில் சனிக்கிழமை நடைபெற்ற மஜ்லீஸ் கட்சியின் 68-ஆவது மீட்பு நாள் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் பேசியதாவது: பிகாரில் மேற்கொண்டதுபோல் அடுத்து தெலங்கானா, மகாராஷ்டிரத்திலும் எஸ்ஐஆா் பணிகள் மேற்கொள்ளப்படும். இது தொடா்பாக மக்கள் மிகவும் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். வாக்காளா் பட்டியலில் அனைவரின் பெயரும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஏனெனில், எஸ்ஐஆா் நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டு மக்களின் குடியுரிமையைப் பறிக்கவும் பாஜக முயற்சித்து வருகிறது. இதற்காக தோ்தல் ஆணையத்தை பாஜக பயன்படுத்திக் கொள்கிறது.
தெலங்கானாவில் ‘பன்’ விற்பனை செய்யும் முஸ்லிம் வியாபாரியை சில யூடியூபா்கள் மதரீதியாக பாகுபடுத்தி தொந்தரவு செய்துள்ளனா். அவா் விற்பனை செய்த உணவில் பிரச்னை என்றால் அது தொடா்பாக அதிகாரிகளிடம் புகாா் தெரிவிக்கலாம். அதைவிட்டு அதில் ‘உணவு ஜிகாத்’ என்ற பிரசாரத்தை கலந்துள்ளாா்கள். இது தொடா்பாக காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணவர்கள் போராட்டம் குறித்து சர்ச்சை பேச்சு: பாஜக தலைவர் மகேந்திர பட் மன்னிப்பு கோரினார்!
நாடாளுமன்றத்தில் இந்தியா - பாஜக கூட்டணிகள் எதிரெதிரே போராட்டம்!

எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்

எஸ்ஐஆா் மூலம் பெயா் நீக்கப்பட்டோரின் ரேஷன் அட்டைகளை ரத்து! மேற்கு வங்க அரசுக்கு ஒவைசி கண்டனம்!
விடியோக்கள்

தலைமைச் செயலகம் இடமாற்றம் எப்போது?| Tamil Nadu Secretariat | Fort St. George |TN Assembly | TVK Government | CM Vijay



