விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தில் என்னென்ன 'கட்'?தாய்நாட்டிற்காக உயிரையே அர்ப்பணித்தவர் அழகு முத்துக்கோன்: முதல்வர் விஜய்சிறுமி உள்பட 6 பேர் கொலை! போக்சோ வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் வெறிச்செயல்!நேற்று தங்கம் வாங்கியிருந்தால் வருத்தப்படுவீர்கள்! இன்றைய விலை நிலவரம் (ஜூலை 11) அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

பெங்களூரில் வேகமாக வந்த கார் பேருந்து மீது மோதல்: இளைஞர்கள் 5 பேர் பலி

பெங்களூரில் வேகமாக வந்த கார், பேருந்து மீது மோதியதில் இளைஞர்கள் 5 பேர் பலியாகினர்

News image

விபத்தில் சிக்கிய கார். - (Screengrab | X)

Updated On :15 பிப்ரவரி 2026, 12:40 pm IST

பெங்களூரில் வேகமாக வந்த கார், பேருந்து மீது மோதியதில் இளைஞர்கள் 5 பேர் பலியாகினர்.

கர்நாடக மாநிலம், துமகுரு-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஜிண்டால் அருகே உள்ள மேம்பாலத்தில் சனிக்கிழமை இரவு வேகமாக வந்த கார் தடுப்புச் சுவரில் மோதி பின்னர் அரசுப் பேருந்து மீது மோதியது. இந்த சம்பவத்தில் இளைஞர்கள் 5 பேர் பலியாகினர்.

பலியானவர்கள் துர்கா பிரசாத் (20), கேசவ் (19), லலித் (22), ஹர்ஷித் (20), தனுஷ் (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தொட்டபல்லாபூரைச் சேர்ந்தவர்கள். போலீஸார் கூறியதாவது, துமகூருவிலிருந்து பெங்களூருவுக்குச் சென்ற கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதியதாகக் கூறப்படுகிறது.

பின்னர் கார் குறுக்கே சென்று பெங்களூருவிலிருந்து ஹுப்பள்ளி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில், காரின் முன் பகுதி முற்றிலுமாக நொறுங்கியது. நான்கு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

விபத்தில் பேருந்தின் முன் பகுதியும் சேதமடைந்தது. இருப்பினும், பேருந்தில் இருந்த 43 பயணிகளும் காயமின்றி தப்பினர். மதநயகனஹள்ளி போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தி வழக்கு பதிவு செய்துள்ளனர். விபத்து குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Summary

According to the police, the Indica car was travelling from Tumakuru towards Bengaluru when the driver allegedly lost control and hit the divider.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.