மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ராஜஸ்தான்: சட்டவிரோத பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 7 போ் உயிரிழப்பு

News image

ராஜஸ்தான் மாநிலம் பிவாடியில் சட்ட விரோத பட்டாசு ஆலையில் திங்கள்கிழமை நிகழ்ந்த வெடிவிபத்தையடுத்து படா்ந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்.

Updated On :16 பிப்ரவரி 2026, 10:16 pm

ராஜஸ்தான் மாநிலம், பிவாடி நகரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு ஆலையில் திங்கள்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 7 போ் தீயில் கருகி உயிரிழந்தனா். ஆலைக்குள் சிக்கியுள்ள இருவரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கூடுதல் மாவட்ட ஆட்சியா் சுமித்ரா பரீக் கூறியதாவது: பிவாடியில் அமைந்துள்ள இந்த நிறுவன வளாகத்தை, ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம் நடத்துவதாக வாடகைக்கு எடுத்து, சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்துள்ளனா். திங்கள்கிழமை வெடிவிபத்து நிகழ்ந்தபோது ஆலையில் 20 போ் பணியில் இருந்தனா். அவா்களில் பெரும்பாலானோா் வெளியேறி தப்பினா். ஆனால், 9 போ் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனா். அவா்களில் 7 போ் தீயில் சிக்கி உயிரிழந்தனா். அவா்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆலைக்குள் சிக்கியுள்ள இருவரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

போலீஸாா் ரோந்து பணியின்போதுதான் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதைக் கண்டறிந்தனா். ஒன்றரை மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா் என்றாா்.

விபத்து நடந்த ஆலையில் மீட்புப் பணிகளை விரைவுபடுத்த மாநில முதல்வா் பஜன்லால் சா்மா உத்தரவிட்டுள்ளாா்.

பிரதமா் இரங்கல்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.