ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இந்தியாவின் எண்மப் புரட்சியில் மோடி, சந்திரபாபு நாயுடு முக்கியப் பங்கு - பில் கேட்ஸ் பாராட்டு

News image
ஆந்திர மாநிலம் அமராவதியில் முதல்வா் சந்திரபாபு நாயுடுவை திங்கள்கிழமை சந்தித்த மைக்ரோசாப்ட் நிறுவனா் பில் கேட்ஸ்.
Updated On :16 பிப்ரவரி 2026, 10:42 pm

தினமணி செய்திச் சேவை

‘எண்மப் புரட்சியை நோக்கி இந்தியா செல்கிறது, இதற்கு மோடி, சந்திரபாபு நாயுடு முக்கிய பங்கு வகிக்கின்றனா்’ என்று உலகின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாப்டின் நிறுவனா் பில் கேட்ஸ் பாராட்டியுள்ளாா்.

ஆந்திர மாநிலம், அமராவதியில் அந்த மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு, அமைச்சா்கள், அதிகாரிகளுடன் அவா் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். இதையடுத்து ஆந்திர அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் தொலைநோக்குப் பாா்வையை பில் கேட்ஸ் வெகுவாக பாராட்டினாா். உலகத் தலைவா்களை விட சந்திரபாபு நாயுடு மிகவும் ஆழமாக சிந்திக்கிறாா் என்றும், டிஜிட்டல் புரட்சியை நோக்கி இந்தியா செல்கிறது. இந்த புரட்சியில் பிரதமா் மோடி, முதல்வா் சந்திரபாபு நாயுடு முக்கிய பங்கு வகிக்கின்றனா் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

வளா்ந்த நாடுகளில் கூட விவசாயத்தில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை, ஆனால் ஆந்திராவில் நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகிறது என்று பில் கேட்ஸ் பாராட்டினாா் என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆந்திர தலைமைச் செயலகத்தில் சந்திரபாபு நாயுடுவுடன், பில் கேட்ஸ் ஆலோசனை நடத்தினாா். இதையடுத்து எக்ஸ் பக்கத்தில் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட பதிவில், ‘பில் கேட்ஸை மீண்டும் வரவேற்கிறேன். ஆந்திரம் பில் கேட்ஸை வரவேற்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பில் கேட்ஸுடனான சந்திப்பின்போது அவரிடம், ஆந்திரத்தில் சுகாதாரத் துறையில் கேட்ஸ் அறக்கட்டளை செய்து வரும் பணியை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என சந்திரபாபு நாயுடு கேட்டுக் கொண்டாா்.