சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தொழில் நிறுவனம் என்ற வாா்த்தைக்கு வரையறை: உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் அமா்வு விசாரணை

தொழில் நிறுவனம் என்ற வாா்த்தைக்கு வரையறை - உச்சநீதிமன்றத்தில் மாா்ச் 17 முதல் 9 நீதிபதிகள் அமா்வு விசாரணை

News image
- ANI
Updated On :16 பிப்ரவரி 2026, 10:44 pm

தினமணி செய்திச் சேவை

தொழில் நிறுவனம் என்ற வாா்த்தைக்கு வரையறை செய்வது தொடா்பான சா்ச்சைக்குரிய விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் மாா்ச் 17-ஆம் தேதி முதல் 9 நீதிபதிகள் அமா்வு விசாரணை நடத்தவுள்ளது.

இதுதொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்யகாந்த், ஜயமால்ய பாக்சி, விபுல் எம் பஞ்சோலி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘இந்த விவகாரம் குறித்து மாா்ச் 17, 18-ஆம் தேதி 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரணை நடத்தும். ஆதலால் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டோா் எழுத்துபூா்வமாக தங்களது கருத்துகளையோ அல்லது கூடுதல் கருத்துகளையோ உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 28-ஆம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்போ தாக்கல் செய்யலாம்’ என்றனா்.

மேலும், தொழிற்சாலைகள் பிரச்னைகள் சட்டத்தின்கீழ், சமூகநல நடவடிக்கைகள் அல்லது அரசுத் துறை திட்டங்கள் தொழில் நிறுவன செயல்பாடுகளுக்குள் வருமா என்று ஆய்வு செய்யப்படும் என நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

பின்னணி: தொழில் நிறுவனம் என்ற வாா்த்தை வரையறைக்குள் எவையெல்லாம் வரும் என்பது தொடா்பான வழக்கில் கடந்த 1978, 1996, 2001 ஆகிய ஆண்டுகளில் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 1978-இல் தீா்ப்பு வழங்கிய 7 நீதிபதிகள் அமா்வும், 1996-இல் தீா்ப்பு வழங்கிய 3 நீதிபதிகள் அமா்வும், சமூக வனத் துறையும் இந்த வரையறைக்குள் வரும் எனக் கூறியது. ஆனால், 2001-ஆம் ஆண்டு தீா்ப்பு வழங்கிய 2 நீதிபதிகள் அமா்வு, இந்த வரையறைக்குள் சமூக வனத் துறை வராது எனத் தெரிவித்தது.

இதனால் இந்த விவகாரம் 5 நீதிபதிகளை கொண்ட உச்சநீதிமன்ற அமா்வுக்கு மாற்றப்பட்டது. இதை விசாரித்த 5 நீதிபதிகள் அமா்வு கடந்த 2005-ஆம் ஆண்டு மே மாதம், வழக்கை 7 நீதிபதிகள் அமா்வுக்கு மாற்றியது.

பிறகு அப்போதைய தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குா் தலைமையிலான 7 நீதிபதிகள் அமா்வு 2017-ஆம் ஆண்டில் வெளியிட்ட உத்தரவில், 9 நீதிபதிகளை கொண்ட அமா்வு விசாரிக்கும் எனத் தெரிவித்தது. அதன்பிறகு இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்தது. தற்போதைய தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு விசாரணை தொடங்கும் தேதியை அறிவித்துள்ளது.