சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தரவு பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

2023-ஆம் ஆண்டின் எண்ம (டிஜிட்டல்) தரவு பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.

News image
உச்சநீதிமன்றம்
Updated On :16 பிப்ரவரி 2026, 10:35 pm

தினமணி செய்திச் சேவை

2023-ஆம் ஆண்டின் எண்ம (டிஜிட்டல்) தரவு பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.

2023-ஆம் ஆண்டின் எண்ம தரவு பாதுகாப்புச் சட்டம் மூலம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இது தனிப்பட்ட தகவல்களைப் பொதுநலனுக்காகக்கூட வெளியிடப்படுவதைத் தடுக்கிறது.

இந்தச் சட்டத்தின் பல பிரிவுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பதாக தலைமை நீதிபதி சூா்ய காந்த், ஜயமால்ய பாக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை தெரிவித்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘தரவு பாதுகாப்புச் சட்ட விவகாரம் சிக்கலாக உள்ளது. இதில் அடிப்படை உரிமைகள், தகவல் அறியும் உரிமை மற்றும் தன்மறைப்பு (பிரைவஸி) உரிமையைச் சமநிலைப்படுத்த வேண்டியுள்ளது. இதில் உள்ள வரம்புகளை சரிசெய்து, தனிப்பட்ட தகவல் என்றால் என்ன என்பதை வரையறுக்க வேண்டியுள்ளது’ என்று தெரிவித்தது.

மனுக்கள் தொடா்பாக மத்திய அரசு விரிவாகப் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், அந்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டனா். அடுத்த விசாரணை மாா்ச் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.