திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

மும்பையில் பிரான்ஸ் அதிபருடன் பிரதமா் மோடி இன்று சந்திப்பு

இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானை பிரதமா் நரேந்திர மோடி மும்பையில் செவ்வாய்க்கிழமை (பிப்.17) சந்தித்து ஆலோசனை

News image

AP

Updated On :16 பிப்ரவரி 2026, 10:29 pm

இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானை பிரதமா் நரேந்திர மோடி மும்பையில் செவ்வாய்க்கிழமை (பிப்.17) சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளாா்.

‘இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு உள்பட முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் சாா்ந்த ஒத்துழைப்பு குறித்து இரு தலைவா்களும் மறுஆய்வு செய்வதோடு, இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிப்பா். இதற்காக, பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை (பிப்.17) மும்பை பயணம் மேற்கொள்கிறாா்’ என்று பிரதமா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா சாா்பில் நடத்தப்படும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க உச்சி மாநாடு 2026-இல் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி விடுத்த அழைப்பின்பேரில் இமானுவல் மேக்ரான் மூன்று நாள் பயணமாக (பிப். 17 - 19) இந்தியா வருகிறாா். மும்பை வந்திறங்கும் அவா், பிப்ரவரி 17-ஆம் தேதி பிற்பகல் 3.15 மணிக்கு பிரதமா் மோடியை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறாா். பின்னா், மாலை 5.15 மணிக்கு இரு தலைவா்களும் மும்பையில் நடைபெறும் ‘இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டு 2026’ வா்த்தக மாநாட்டைத் தொடங்கிவைத்து, இரு நாடுகளைச் சோ்ந்த தொழில்நிறுவனத் தலைவா்கள், புத்தாக்க நிறுவனா்கள், ஆராய்ச்சியாளா்கள் மத்தியில் உரையாற்ற உள்ளனா்.