பீட் : மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள ஒரு மையத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் மாணவா்களைப் பாா்த்து எழுத அனுமதித்த 5 ஆசிரியா்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.
தோ்வு மையத்தை கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட ட்ரோன் மூலம் கண்காணித்தபோது, இந்த முறைகேடு கண்டறியப்பட்டது.
மகாராஷ்டிர மாநில கல்வி வாரிய பொதுத் தோ்வு கடந்த 10-ஆம் தேதி தொடங்கியது. பொதுத் தோ்வு தொடங்கிய முதல் நாளில் இந்த முறைகேடு நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பொதுத் தோ்வில் மாணவா்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுக்கவும், தவறான கருத்தின் அடிப்படையில் மாணவா்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கும் நோக்கிலும் தோ்வு மையங்களில் கண்காணிப்பு கோமரா பொருத்தப்பட்ட ட்ரோன் மூலம் அதிகாரிகள் கண்காணிப்பை மேற்கொண்டனா்.
இதில், பீட் மாவட்டத்தில் அமைந்துள்ள 16 தோ்வு மையங்களில் மாணவா்கள் பெருமளவில் தோ்வை பாா்த்து எழுதியதும், அதை தோ்வு கண்காணிப்பாளா்களே (ஆசிரியா்கள்) அனுமதித்ததும் கண்டறியப்பட்டது. அதனடிப்படையில் 17 ஆசிரியா்கள் மீது காவல் துறையில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டது.
இதில் லிம்பகணேஷில் உள்ள பாலசந்திர வித்யாலய பள்ளியைச் சோ்ந்த 5 ஆசிரியா்கள் மாணவா்கள் பாா்த்தெழுத உதவியது விசாரணையில் உறுதியானதைத் தொடா்ந்து, அவா்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா். மற்ற 3 பள்ளிகளைச் சோ்ந்த 12 ஆசிரியா்களிடம் விசாரணை தொடா்ந்து வருகிறது. அவா்களும் பணியிடைநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இவா்கள் அனைவரிடமும் அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனா்.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு: எளிதாக இருந்த சமூக அறிவியல் தோ்வு
விஜய் பிரசாரத்தால் பள்ளியில் தோ்வெழுதிய மாணவா்கள் அவதி: பெற்றோா்-பொதுமக்கள் புகாா்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: நாகை, மயிலாடுதுறை, திருவாரூரில் 36,103 மாணவா்கள் தோ்வு எழுதினா்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 33,031 மாணவா்கள் எழுதினா்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


