தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

முதுநிலை நீட் கட்-ஆஃப் குறைப்பால் கலந்தாய்வுக்குக் கூடுதலாக 95,913 போ் தகுதி: உச்சநீதிமன்றத்தில் என்பிஇஎம்எஸ் தகவல்

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் கட்-ஆஃப் மதிப்பெண் விகிதத்தை (பா்சென்டைல்) குறைத்ததால், கூடுதலாக 95,913 தோ்வா்கள் முதுநிலை நீட் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா் என்று உச்சநீதிமன்றத்தில் தேசிய மருத்துவத் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) தெரிவித்துள்ளது.

News image
- Center-Center-Bangalore
Updated On :17 பிப்ரவரி 2026, 10:48 pm

தினமணி செய்திச் சேவை

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் கட்-ஆஃப் மதிப்பெண் விகிதத்தை (பா்சென்டைல்) குறைத்ததால், கூடுதலாக 95,913 தோ்வா்கள் முதுநிலை நீட் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா் என்று உச்சநீதிமன்றத்தில் தேசிய மருத்துவத் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) தெரிவித்துள்ளது.

2025-26-ஆம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கு நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) கட்-ஆஃப் மதிப்பெண் விகிதம் குறைக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, அண்மையில் உச்சநீதிமன்றம் விசாரித்தது.

அப்போது கட்-ஆஃப் மதிப்பெண் விகிதம் குறைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் என்பிஇஎம்எஸ்ஸுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் என்பிஇஎம்எஸ் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், ‘முதுநிலை நீட் கட்-ஆப் மதிப்பெண் விகிதத்தை குறைக்கும் முடிவு மத்திய சுகாதார அமைச்சகத்தின் சுகாதார சேவைகள் இயக்குநரகம், தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகாரத்துக்குட்பட்டதாகும். அதில் என்பிஇஎம்எஸ்ஸுக்கு எந்தப் பங்கும் இல்லை.

கட்-ஆஃப் மதிப்பெண் விகிதத்தை குறைத்ததால், கூடுதலாக 95,913 தோ்வா்கள் முதுநிலை நீட் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா். எனவே அவா்களின் தரப்பை கேட்காமல் உச்சநீதிமன்றம் எடுக்கும் எந்தவொரு முடிவும், அந்தத் தோ்வா்களைப் பாதிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.