ஏஐ உச்சி மாநாட்டில் சீன ரோபோ நாயை காட்சிப்படுத்திய உத்தரப் பிரதேச பல்கலைக்கழக மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேசியத் தலைநகர் தில்லியில் தெற்குலத்தின் சார்பில் இந்தியாவில் முதல்முறையாக செய்யறிவு தாக்க உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. பாரத் மண்டபத்தில் கடந்த பிப்.16 ஆம் தேதி தொடங்கி பிப். 20 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள், நிறுவனர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள், மாணவர்களும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், முறையான ஒருங்கிணைப்பின்மை, நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பு ஆகியவை பொது மக்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பெரும் அசெளகரியத்தை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்க்கட்சிகளின் சார்பில் கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்தியாவைப் பெருமைப்படுத்துவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்திருந்த ரோபோ நாய் விடியோ.
பிரம்மாண்டமான செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டின் ஏற்பாடுகளின் குளறுபடிகளால் பாா்வையாளர்களும், பொது மக்களும் கடுமையான அசெளகரியகத்துக்கு உள்ளானதாக சமூக ஊடங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த புத்தாக்க ஏஐ மாநாட்டில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் அனைவரின் முன்னிலையிலும் காட்சிப்படுத்தப்பட்டன. சில கண்டுபிடிப்புகள் வரவேற்பையும் பெற்றுள்ளன.

இந்த குளறுபடிகளுக்கு மத்தியில், புதிய பிரச்சினையாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்கோடியாஸ் பல்கலைக்கழக மாணவர்கள், ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் ரூ. 2 லட்சம் முதல் 3 லட்சம் மதிப்பிலான சீனாவில் தயாரிக்கப்பட்ட யுனிட்ரீ கோ2 என்ற ரோபோ நாயை தாங்கள் தயாரித்ததாகக் கூறி ஏஐ மாநாட்டில் காட்சிப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கடும் விமர்சனங்களையும் பெற்றுள்ளது.
இந்த ரோபோ நாய் தங்களால் உருவாக்கப்பட்டது என நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள அந்த பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ள நிலையில், அந்த நாய்க்கு டிஜே ரோபோட் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த விடியோ இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்ட நிலையில், சீனாவைச் சேர்ந்தவர்கள் பலரும் அந்த ரோபோ நாய் சீனாவில் தயாரிக்கப்பட்டது என கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் பெரிதான நிலையில், ஏஐ உச்சி மாநாட்டில் இருந்து கல்கோடியாஸ் பல்கலைக்கழக மாணவர்கள் உடனே வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Summary
The controversy was fuelled by the viral video in which a woman, introduced as part of the university’s Centre of Excellence, explained the robot’s features and claimed that “Orion” had been developed internally.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு தில்லியில் தெரு நாயைத் தாக்கிய பாதுகாவலாளிக்கு அடி உதை: விலங்கு நல ஆா்வலா் மீது புகாா்

சுவா் ஏறிக் குதித்து வளா்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை
அருங்காட்சியகத்தில் கோடீஸ்வரர்களின் முகத்துடன் திரியும் நாய்கள்!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




