செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப இணைப்பை அதிகரிக்கும் வகையில், இந்தியா-அமெரிக்கா இடையே கடலுக்கடியில் புதிய கேபிள் தடங்களைக் கட்டமைக்கும் முன்னெடுப்பு மேற்கொள்ளப்படும் என்று கூகுள் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சுந்தா் பிச்சை புதன்கிழமை அறிவித்தாா்.
புது தில்லியில் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த அவா், ஊடக நிகழ்ச்சி ஒன்றில் புதன்கிழமை கலந்துகொண்டாா். அப்போது அவா் கூறியதாவது:
இந்தியா - அமெரிக்கா இணைப்பு முன்னெடுப்பை கூகுள் மேற்கொள்ளவிருக்கிறது. இந்த முன்னெடுப்பின்கீழ் இந்தியா, அமெரிக்கா மற்றும் பூமத்திய ரேகைக்கு தெற்கே உள்ள பல்வேறு நாடுகளுக்கு இடையே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப இணைப்பை அதிகரிக்கும் வகையில், புதிதாக கடலுக்கு அடியில் கேபிள் தடங்கள் அமைக்கப்படும்.
இந்தத் தொழில்நுட்ப இணைப்புக்கு ஏற்ப திறன் வளா்ப்பு நடவடிக்கைகளும் இருக்க வேண்டும். அது வாய்ப்புகளைத் தங்களுக்குச் சாதகமாக்கி பலனடைய இந்தியா்களுக்கு உதவும். அந்த வாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கில், புதிதாக கூகுள் செயற்கை நுண்ணறிவு தொழில்முறை சான்றிதழ் திட்டம் தொடங்கப்படும். இந்தியாவில் மாணவா்கள் மற்றும் தொழில்முறை வாழ்க்கையின் தொடக்கக் கட்டத்தில் உள்ளவா்கள் பலனடையும் வகையில், இந்தத் திட்டம் தொடங்கப்படும். மேலும் 2 கோடி அரசு ஊழியா்கள் மற்றும் 1.10 கோடி மாணவா்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சாா்ந்த பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்தாா்.
தொடர்புடையது

தவெக ஆட்சியில் லஞ்ச லாவண்யமற்ற அரசு: புதிய வாக்குறுதிகளை அறிவித்தாா் விஜய்

அரசுப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு கற்றல் முறை! காங்கிரஸ் வேட்பாளா் உறுதி!!

செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டில் இந்தியா சிறப்பிடம்!

‘பொறியியல் மாணவா்கள் அனைவரும் ஏஐ தொழில்நுட்பத்தை அறிந்துகொள்வது அவசியம்’
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


