ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்த நிலையில், ரஷிய இறக்குமதி 40 சதவிகிதம் குறைந்துள்ளது.
ரஷியா - உக்ரைன் இடையேயான போருக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதே காரணம் எனக் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா மீது 25 சதவிகித வரியையும், கூடுதலாக 25 சதவிகித அபராத வரியையும் விதித்தார். இது இந்திய சந்தையில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஜனவரி மாதத்தில் ரஷியாவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி 40.48 சதவிகிதம் குறைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 4.81 பில்லியன் டாலர்களாக இருந்த இறக்குமதி, இந்தாண்டு ஜனவரியில் 2.86 பில்லியன் டாலர்களாகக் குறைந்துள்ளது.
ரஷியாவிலிருந்து 80 சதவிகித இறக்குமதி கச்சா எண்ணெய் பொருள்களை மட்டுமே இந்தியா சார்ந்திருக்கிறது. மீதமுள்ள 20 சதவிகிதத்தில் கச்சா எண்ணெய் தவிர, நிலக்கரி, கோக், சில பெட்ரோலியப் பொருள்கள், உரம், இரும்பு, செய்தித்தாள்கள், பருப்பு வகைகள், முத்து போன்றவையும் இறக்குமதி செய்கிறது.
2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 4.73 பில்லியன் டாலர்களாக உச்சத்தில் இருந்த கச்சா எண்ணெய் இறக்குமதி, செப்டம்பரில் 3.32 பில்லியன் டாலர்களகக் குறைந்தது.
இது கிட்டத்தட்ட 30 சதவிகித குறைவு. ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டதாக இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் தெரிவித்ததுபோலவே இறக்குமதியில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2012-2013 ஆம் ஆண்டில், தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவிலிருந்து இந்தியா 14.10 பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்திருந்தது. ஆனால், பல்வேறு அரசியல் காரணங்களால் வெனிசுவேலா கச்சா எண்ணெயின் இறக்குமதி படிப்படியாகக் குறைந்தது.
இதன் விளைவாக 2021-2022 ஆம் ஆண்டில் வெனிசுவேலாவில் இருந்து இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதியின் அளவு பூஜ்ஜியமானது.
அதே நேரத்தில் 2011 - 2012 ஆம் ஆண்டில் பூஜ்ஜியமாக இருந்த இந்தியாவிற்கான ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி 2022-2023 ஆம் ஆண்டில் திடீரென உச்சம் பெற்று 31 பில்லியன் டாலர்களைத் தாண்டியது. 2023-24-ல் 46.49 பில்லியன் டாலர்களாகவும், 2024-25 ஆம் ஆண்டில் 50.28 பில்லியன் டாலர்களாகவும் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
India's merchandise imports from Russia in January fell 40.48% to $2.86 billion compared to $4.81 billion in January 2025, according to latest data released on Monday, with the reduction largely on account of Indian refiners drastically cutting Russian crude purchases .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்

சிக்கனத்துக்கான நேரம்!
ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தரவுகள் ரகசியமானவை: மத்திய அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்த தகவல் ஆணையம்!
ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி மதிப்பு: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




