நாட்டில் பிரதமர் மோடி ஆட்சியில் முஸ்லிம்கள் எந்தவித பிரச்னைகளையும் எதிர்கொள்ளவில்லை என அகில இந்திய சன்னி ஜமையாதுல் உலமா அமைப்பின் பொதுச் செயலாளர் கந்தபுரம் அபூபக்கர் முசலியார் தெரிவித்துள்ள கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு பிப். 16 ஆம் தேதி பேட்டி அளிக்கும்போது, அவர் இந்த சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறினார்.
இது தொடர்பாக கேரள முஸ்லிம் இளைஞர் கூட்டமைப்பு மற்றும் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த தக்ஷின கேரள ஜமைதுல் உலமா அமைப்பு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், அரசு ஒத்துழைப்புடன் சங்பரிவார் நடத்தும் வன்முறைகளை மூடிமறைக்கும் வகையில் அபூபக்கர் பேசியுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
''இந்தியாவில் முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்காக சர்வதேச அமைப்புகள் கூட குரல் கொடுக்கும் வகையில், கந்தபுரம் தெரிவித்துள்ள கருத்துகள் அதிர்ச்சி அளிக்கிறது. அரசு இயந்திரங்களைப் பயன்படுத்தி கலாசார ரீதியாகவும், உடல்ரீதியாகவும் முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டு வரும் மோசமான சூழலை இந்தியா சந்தித்து வருகிறது.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இன அழிப்பைத் தூண்டும் வகையில் வெளிப்படையாகவே பேசியுள்ளனர்.
அபூபக்கர் செயல்பட்டுவரும் மலபார் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் (எஸ்ஐஆர்) முதியவர் ஒருவரின் குடியுரிமை பறிக்கப்பட்ட செய்தியை சமீபத்தில் அறிந்தோம். அவர்கள் வெறுப்பு பிரசாரத்தை பரப்பிவரும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் கீழ், நாட்டில் முஸ்லிம்கள் எந்தவொரு பிரச்னைகளையும் எதிர்கொள்ளவில்லை என அபூபக்கர் கூறுவது அர்த்தமற்றதாக உள்ளது'' எனக் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கேரள முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்த மற்றொரு பொதுச்செயலாளர் அப்துல் சலீம் கூறுகையில், அமலாக்கத் துறை போன்ற மத்திய அரசின் நிறுவனங்களுக்கு பயந்து, பிரதமர் மோடியை மகிழ்விப்பதற்காக அபூபக்கர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக விமர்சித்துள்ளார். தனிப்பட்ட ஆதாயங்களுக்காக ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக இருந்து பேசுவது ஏற்புடையதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
Summary
Muslims in India face no issues criticism for Kanthapuram Aboobacker Musaliyar speech
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










