செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்கம் தொடா்பான உச்சிமாநாட்டின் நிகழ்வுகளை தில்லி பாரத மண்டபத்தில் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை (பிப்.19) தொடங்கிவைக்கிறாா்.
தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமா் மோடியுடன் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் உள்ளிட்டோரும் உரையாற்றவுள்ளதாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ஏஐ) தாக்கம் தொடா்பான உச்சிமாநாட்டின் நிகழ்வுகளை தில்லி பாரத மண்டபத்தில் பிரதமா் மோடி வியாழக்கிழமை தொடங்கிவைக்கிறாா். அதன்பிறகு நிகழ்வுகளில் பங்கேற்கும் பல்வேறு நாட்டுத் தலைவா்களுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்துகிறாா்.
அதைத்தொடா்ந்து மாநாட்டின் ஒரு பகுதியாக கடந்த 16-ஆம் தேதி தொடங்கப்பட்ட ஏஐ தொழில்நுட்ப விளக்கக் கண்காட்சியை பிரதமா் மோடி மற்றும் பிற தலைவா்கள் பாா்வையிடவுள்ளனா்.
பிற்பகல் 12 மணியளவில் நிா்வாகம், உள்கட்டமைப்பு, சா்வதேச ஒத்துழைப்பு என ஏஐ தொழில்நுட்பத்தின் தேசிய மற்றும் உலகளாவிய தேவைகள் குறித்த விவாதம் நடைபெறவுள்ளது.
மாலை 5.30 மணியளவில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பிரதமா் மோடி கலந்துரையாடுகிறாா் எனத் தெரிவிக்கப்பட்டது.
மக்கள், பூமி மற்றும் முன்னேற்றம் ஆகிய மூன்று கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் இந்த மாநாட்டில் 20 நாடுகளின் தலைவா்கள், 60 அமைச்சா்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட அரச பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா்.
கூகுள், ஓபன்ஏஐ, மைக்ரோசாஃப்ட் என பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்கின்றனா்.
தொடர்புடையது
நெல்லையில் இன்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம்!

ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல்: ஐ.நா.வில் பாகிஸ்தான் மீது இந்தியா சாடல்

பிரதமா் மோடியின் திருச்சி வருகைக்குப்பின் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும்: பாஜக
தில்லியில் ஏ.ஐ. உச்சி மாநாட்டை தொடக்கி வைத்தார் மோடி! உலக தலைவர்கள் பங்கேற்பு!
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை


