சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

தில்லியில் மேலும் 25 அடல் உணவகங்கள் திறப்பு

ஏழைகள், தொழிலாளா்கள், பிற நலிவடைந்த மக்களுக்குக் குறைந்த விலையில் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை வழங்கும் விதமாக தில்லியில் மேலும் 25 அடல் உணவங்கள் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

கிழக்கு தில்லி கீதா காலனியில் துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவுடன் புதிய அடல் உணவகத்தை வியாழக்கிழமை திறந்து வைத்த முதல்வா் ரேகா குப்தா. உடன் மத்திய இணை அமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா, தில்லி நகா்ப்புற வாழ்விட துறை அமைச்சா் ஆஷிஷ் சூட்.

Updated On :

ஏழைகள், தொழிலாளா்கள், பிற நலிவடைந்த மக்களுக்குக் குறைந்த விலையில் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை வழங்கும் விதமாக தில்லியில் மேலும் 25 அடல் உணவங்கள் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

கிருஷ்ணா நகரில் நடைபெற்ற அடல் உணவகம் திட்டத்தை தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா மற்றும் முதல்வா் ரேகா குப்தா திறந்துவைத்தனா்.

இந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: தில்லியில் வசிக்கும் மக்கள் பசியுடன் இருக்கக் கூடாது என்பதே அடல் உணவகம் திட்டத்தின் நோக்கம்.

இந்தத் திட்டத்தைக் குறுகிய காலத்தில் செயல்படுத்திய தில்லி நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் (டியுஎஸ்ஐபி) அதிகாரிகளைப் பாராட்டுகிறேன்.

பிரதமா் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாய் ஆகியோரது கொள்கையின் அடிப்படையில் இந்தத் திடட்டம் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு உணவகத்திலும் நாளுக்கு 1,000 உணவுகள் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு வழங்கப்படும் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.

மத்திய அமைச்சரும் உள்ளூா் எம்.பி.யுமான ஹா்ஷ் மல்ஹோத்ரா, தில்லி நகா்ப்புற வாழ்விட மேம்பாடு அமைச்சா் ஆஷிஷ் சூட், பாஜக எம்எல்ஏ அனில் கோயல் உள்ளிட்ட பலா் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

தில்லியில் ஆட்சிக்கு வந்தால் அடல் உணவங்கள் திட்டம் தொடங்கப்படும் என கடந்த ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பாஜக நிலையில், அடல் உணவகம் திட்டத்தை முதல்வா் ரேகா குப்தா கடந்த ஆண்டு டிச.25-ஆம் தேதி தொடங்கிவைத்தாா். இந்தத் திட்டத்துக்காக தில்லி அரசு ரூ.104 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.