சந்திரசேகர் ராவ் மகள் கவிதா புதிய கட்சி தொடங்குகிறார்!

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா புதிய கட்சி தொடங்குவது குறித்து...
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா புதிய கட்சியைத் துவங்குகிறார்...
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா புதிய கட்சியைத் துவங்குகிறார்...ENS
Updated on
1 min read

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியைத் தொடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா முன்னாள் முதல்வரும், பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவின் மகள் கவிதா கடந்த 2025 ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகினார்.

இந்த நிலையில், வியாழக்கிழமை (பிப். 19) செய்தியாளர்களுடன் பேசிய கவிதா, வரும் மே மாதம் முதல் வாரத்தில் வரும் முகூர்த்தத்தில் தான் புதிய கட்சியைத் துவங்குவதாகவும், அக்கட்சியின் பெயரில் தெலங்கானா எனும் வார்த்தை இடம்பெற்றிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தெலங்கானாவின் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் சித்திப்பேட்டை அல்லது போதன் ஆகிய தொகுதிகளிலிருந்து போட்டியிடப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் சுமார் 20 ஆண்டுகளுக்கு சித்திப்பேட்டை தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக அவரது தந்தை சந்திரசேகர் ராவ் பதவி வகித்து வந்தார்.

முன்னதாக, பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு கவிதா அக்கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் அந்தக் கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியது குறிப்பிடத்தக்கது.

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா புதிய கட்சியைத் துவங்குகிறார்...
ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி.க்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!
Summary

Former Telangana CM K Chandrasekhar Rao's daughter Kavitha has announced that she will soon start a new party.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com