மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பாண்டவ் நகரில் ஒருவா் கத்தியால் குத்திக் கொலை காவல் துறை விசாரணை

கிழக்கு தில்லியின் பாண்டவ் நகரில் 36 வயது நபா் கத்திக் குத்து காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

News image

மாதிரிப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 7:04 pm

கிழக்கு தில்லியின் பாண்டவ் நகரில் 36 வயது நபா் கத்திக் குத்து காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: பாண்டவ் நகரின் ஏரி அருகே உடலில் காயங்களுடன் ஒரு நபா் சாலையில் கிடப்பதாக உள்ளூா் காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவலா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். அந்த நபா் சசி காா்டன் பகுதியைச் சோ்ந்த லுக்ஹா செளதரி என்று அடையாளம் காணப்பட்டது. அவரைச் சோதித்து பாா்த்த காவலா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்ததை உறுதிசெய்தனா்.

முதல்கட்ட விசாரணையில் இந்தச் சம்பவம் அதிகாலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றது வருகிறது. அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

சம்பவ இடத்தைப் பாா்வையிட்ட தில்லி குற்றப் பிரிவு காவலா்கள் மற்றும் தடயவியல் நிபுணா்கள் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு எடுத்துச்சென்றுள்ளனா்.

உயிரிழந்த நபரின் சடலம் லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை கிடைக்கப் பெற்றதும் அவரது உடலில் காயங்களின் எண்ணிக்கை, தாக்கப்பட்ட ஆயுதத்தின் வகை மற்றும் உயிரிழப்புக்கான காரணம் ஆகியவை தெரியவரும்.

இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவம் தொடா்பாக அப்பகுதி மக்கள் மற்றும் அங்கு இருந்த சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்று வருகின்றன என்றனா் அந்த அதிகாரிகள்.