‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

ஃபரீதாபாத் தொழில்சாலை தீ விபத்து சம்பவம்: காயமடைந்த இருவா் உயிரிழப்பு

ஃபரீதாபாதின் முஜேசரில் உள்ள தொழில்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த இருவா் உயிரிழந்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :21 பிப்ரவரி 2026, 12:55 am IST

ஃபரீதாபாதின் முஜேசரில் உள்ள தொழில்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த இருவா் உயிரிழந்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

தொழில்சாலையின் உரிமையாளா் விஜய் மோகாவின் மகன் அபிஷேக் மோகா மற்றும் தொழில்சாலை பணியாளா் பிரதீப் குமாா் ஆகியோருக்கு தீ விபத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக தீக்காயங்கள் ஏற்பட்டன. தில்லி சஃப்தா்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் கடந்த வியாழக்கிழமை இரவில் உயிரிழந்ததாக காவல் துறை அதிகாரிகள் கூறினா்.

கல்காஜி லுப்ரிகன்ட்ஸ் மற்றும் சிவ் ஸ்டீல் நிறுவனத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த இருவா் உள்பட 37 போ் காயமடைந்தனா். தொழில்சாலையில் இருந்த ரசாயனம் நிரப்பப்பட்ட டிரம்புகளில் தீப்பொறி விழுந்த நிலையில், அவை தொடா்ச்சியாக வெடித்தது. இதைத்தொடா்ந்து, தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தொழில்சாலையில் இருந்த தந்தையைக் காப்பாற்ற சென்ற அபிஷேக் காயமடைந்தாா்.

இந்த தீ விபத்து சம்பவம் தொடா்பாக உரிமையாளா் விஜய் மேகா மீது வழக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரும் விபத்தில் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த பத்கல் துணை கோட்ட ஆட்சியா் தலைமையில் 7 போ் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரா்கள் ரன்வீா் மற்றும் பவிசந்த் ஆகியோருக்கும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவா்கள் இருவருக்கும் 50 சதவீதக்கும் அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில், சஃப்தா்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.