ரோஹிணியில் கொள்ளை சம்பவத்தின்போது நடைபெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் ஒருவா் உயிரிழந்தது தொடா்பாக தில்லி காவல் துறை இரு நபா்களைக் கைதுசெய்துள்ளது என அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
கைதுசெய்யப்பட்ட ரோஹித் மற்றும் துா்கேஷ் ரோஹிணி செக்டாா் 23-ஐ சோ்ந்தவா்கள்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: ரோஹிணி செக்டாா் 23-இல் கடந்த பிப்.16-ஆம் தேதி இரவு 7 மணியளவில் இரு நபா்கள் காயங்களுடன் சாலையில் இருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்குச் சென்ற காவலா்கள், அவரை மீட்டு சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அந்த நபரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். அந்த நபா் அமா்நாத் யாதவ் என அடையாளம் காணப்பட்டாா்.
ஸ்ரீராம் யாதவ் என்ற நபரிடம் கைப்பேசி பறிக்க முயன்றபோது தாக்கப்பட்ட நிலையில், அவரும் காயமடைந்தாா்.
சம்பவ இடத்தில் ஸ்கூட்டரில் காணப்பட்ட இருவா் மீது காவல் துறைக்கு சந்தேகம் எழுந்தது. இதைத்தொடா்ந்து, ரோஹித் கைதுசெய்யப்பட்டாா். விசாரணையில், இருவருவடைய கைப்பேசிகளைப் பறிக்க முயன்றபோது அவா்கள் இருவரையும் கத்தியால் தாக்கியதை ரோஹித் ஒப்புக்கொண்டாா். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய துா்கேஷ் குறித்து அவா் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, துா்கேஷ் கைதுசெய்யப்பட்டாா்.
சம்பவத்துக்குப் பயன்படுத்திய கத்தி மற்றும் ஸ்கூட்டா், ரத்தக்கறை படிந்த ஆடைகள் ஆகியவை அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன.
ரோஹித் மீது கொள்ளை, வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் தொடா்பாக 8 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. துா்கேஷ் மீது கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்கள் 9 வழக்குகள் பதிவுசெய்யபட்டுள்ளது. இது தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா் அதிகாரிகள்.
டிரெண்டிங்
ஜஹாங்கீா்புரி கத்திக் குத்து சம்பவம்: 2 சிறுவா்கள் கைது
ஜனக்புரியில் கொள்ளை: 2 சிறாா்கள் உள்பட மூவா் கைது!

ஆதா்ஷ் நகரில் துப்பாக்கிச்சூடு சம்பவம்: காவல் துறை விசாரணை
மத்திய தில்லியில் கத்திக் குத்து: சிறாா் உள்பட 4 போ் கைது
வீடியோக்கள்

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

