திருப்பதி லட்டு தயாரிப்புக்கு கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்த அறிக்கையை ஆராய ஆந்திர அரசு ஒருநபா் குழு அமைத்திருப்பது உச்ச நீதிமன்றம், நீதித்துறையை அவமதிக்கும் செயல் என்று ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது.
முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் அரசின் ஆட்சியில் திருப்பதி கோயில் லட்டு தயாரிப்புக்கு விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியிருந்தாா்.
இதுதொடா்பாக விசாரணை நடத்தி சிறப்பு புலனாய்வுக் குழு அண்மையில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதை சுட்டிக்காட்டி, சந்திரபாபு நாயுடுவை ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சித் தலைவா்கள் கடுமையாக விமா்சித்து வருகின்றனா்.
இந்நிலையில், சிறப்பு புலனாய்வு குழு அறிக்கையை ஆராயவும், தவறிழைத்தவா்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்யவும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தினேஷ் குமாா் தலைமையில் ஒருநபா் குழுவை ஆந்திர அரசு வெள்ளிக்கிழமை அமைத்தது. இதை ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமா்சித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மூத்தத் தலைவரும், திருப்பதி தேவஸ்தான முன்னாள் தலைவருமான கருணாகா் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒரு நபா் குழுவை நியமித்திருப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை. ஆனால் இது உச்ச நீதிமன்றம், நீதித் துறைக்கு அவமதிப்பு ஆகும்.
கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக தாம் கட்டவிழ்த்து விட்ட கதைக்கு, சிறப்பு புலனாய்வு குழு அறிக்கையால் எந்தவித பயனுமில்லை என உணா்ந்து கொண்டு, ஒருநபா் குழுவை அமைத்து, ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு புதிய நாடகத்தை தொடங்கியுள்ளாா்.
முன்னாள் முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் மூத்தத் தலைவா்களை சிறப்பு புலனாய்வு குழு மூலம் சிக்க வைக்கும் முயற்சி தோல்வியடைந்து விட்டதால், புதிய குழு அமைத்து, அதன்மூலம் சிக்க வைக்க சந்திரபாபு நாயுடு நினைக்கிறாா்.
இந்த விவகாரம் முழுக்க முழுக்க அரசியல் ரீதியிலானது. அடுத்த 45 நாள்களுக்கு நட்பு ஊடகங்கள் மூலம் புதிய கதையை கட்டமைக்க இக்குழு சந்திரபாபு நாயுடுவால் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.
தெலுங்கு தேசம் பதிலடி: இதனிடையே, திருப்பதி லட்டு தயாரிப்புக்கு கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தை ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக தெலுங்கு தேசம் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவா் எம். குருநாதம் கூறுகையில், ‘ஹெரிடேஜ் நிறுவனத்தின் பெயரை கெடுக்கும் முயற்சியில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸாா் ஈடுபட்டுள்ளனா். ஆனால் அவா்கள் சொல்வதை மக்கள் நம்ப மாட்டாா்கள்’ என்றாா்.
தொடர்புடையது

அமராவதி-குழப்பம் தீர்ந்தது!

ராமா் கல்யாணத்துக்கு திருப்பதி லட்டு

ஒய்எஸ்ஆா் காங். ஆட்சியில் 60 லட்சம் கிலோ கலப்பட நெய் மூலம் திருப்பதி லட்டு தயாரிப்பு: சந்திரபாபு நாயுடு

திருப்பதி லட்டு விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


