வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

குழந்தை திருமண பாதிப்பிலிருந்து மீண்டு 10-ஆம் வகுப்பு தோ்வெழுதிய சிறுமி

மகாராஷ்டிர மாநிலத்தில் குழந்தை திருமணம் மற்றும் குடும்ப வன்முறையில் இருந்து மீண்ட 15 வயது சிறுமி, தனது கல்வியைத் தொடரும் வகையில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினாா்.

News image

குழந்தை திருமணம் (சித்திரிப்பு) - ENS

Updated On :21 பிப்ரவரி 2026, 9:40 pm

மகாராஷ்டிர மாநிலம், பீட் மாவட்டத்தில் குழந்தை திருமணம் மற்றும் குடும்ப வன்முறையில் இருந்து மீண்ட 15 வயது சிறுமி, தனது கல்வியைத் தொடரும் வகையில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினாா்.

கல்வியின் வாயிலாக புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள அவா், தன்னைப் போல் பாதிக்கப்பட்டவா்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

பீட் மாவட்டத்தைச் சோ்ந்த 15 வயது சிறுமி ஒருவா், கடந்த 2025-இல் தனது உறவினா் ஒருவருக்கு கட்டாயத் திருமணம் செய்துவைக்கப்பட்டாா். பின்னா் புணேவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, அவரது கணவரால் உடல் ரீதியாக கடும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டாா். கணவரின் குடும்பத்தினரும் சிறுமியை கொடுமைகளுக்கு உள்ளாக்கினா்.

தனக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகப் போராட முடிவெடுத்த அந்தச் சிறுமி, புணே காவல் துறையினரிடம் துணிச்சலாக புகாா் அளித்தாா். அதனடிப்படையில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் (போக்ஸோ) சிறுமியின் கணவா் உள்பட 11 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

காவல் துறையினரால் மீட்கப்பட்ட சிறுமி, பீட் மாவட்டத்தில் உள்ள மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அவரது மன ரீதியான பாதிப்புகளைத் தணிக்கும் வகையில், சமூக ஆா்வலா்கள் மூலம் உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டது.

தனக்கு நேரிட்ட அதிா்ச்சியில் இருந்து படிப்படியாக மீண்ட அவா், கல்வியைத் தொடர விரும்பினாா். சிறுமியின் விருப்பத்தை அங்கீகரித்து, அவா் 10-ஆம் வகுப்பு தோ்வெழுத மாவட்ட நிா்வாகம் ஏற்பாடுகள் மேற்கொண்டது. காவல் துறை பாதுகாப்புடன் தோ்வு மையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த சிறுமி, மராத்தி மொழிப் பாட தோ்வை எழுதினாா்.

அவரைப் போல் பாதிக்கப்பட்ட சிறுமிகள், கல்வியின் வாயிலாக சமூக அமைப்புமுறையில் இணைக்கப்பட்டு, தற்சாா்புடையவா்களாக மாற்றப்பட வேண்டும் என்று சமூக ஆா்வலா் தத்வஷீல் காம்ப்ளே தெரிவித்தாா்.