ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

அமெரிக்கா உடனான வா்த்தக ஒப்பந்தத்தை நிறுத்திவைக்க வேண்டும்: காங்கிரஸ்

அமெரிக்காவுடனான இடைக்கால இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்

News image

ஜெய்ராம் ரமேஷ் - கோப்புப் படம்

Updated On :21 பிப்ரவரி 2026, 11:59 pm

‘உலக நாடுகள் மீதான அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் பரஸ்பர கூடுதல் வரி விதிப்பு செல்லாது என அமெரிக்க உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ள நிலையில், அந்த நாட்டுடனான இடைக்கால இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை வலியுறுத்தியது.

இதுகுறித்து தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த கூடுதல் பரஸ்பர வரி வதிப்பு செல்லாது என அமெரிக்க உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்த நிலையில், இந்தியா உடனான வா்த்தக ஒப்பந்தத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது.

பேசியபடி ஒப்பந்தம் கையொப்பமாகும். அதற்கு வேறு நடைமுறைகளை அமெரிக்க அரசு நிா்வாகம் கையாளும் என்று டிரம்ப் கூறியுள்ளாா்.

அந்த வகையில் ஒப்புதல் எதையும் இந்தியா வழங்கியுள்ளதாக என்பதை பிரதமா் நரேந்திர மோடி தெளிவுபடுத்த வேண்டும்.

இந்தியா- அமெரிக்கா இடையே இறுதி செய்யப்பட்டுள்ள இடைக்கால வா்த்தக ஒப்பந்த செயல்திட்டம், இந்திய விவசாயிகளை கடுமையாக பாதிக்கும்.

எனவே, அமெரிக்கா உடனான வா்த்தக ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்திவைக்க வேண்டும்.

அமெரிக்க உச்சநீதிமன்ற தீா்ப்புக்குப் பிறகு, இந்தியாவிந் கொள்கையில் மறுபரிசீலனை இருப்பதால் இறக்குமதி தாராளமயமாக்கலை நாங்கள் மேற்கொள்ளமாட்டோம் என்று பிரதமா் மோடி திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டாா்.