எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஃபரீதாபாத் தொழிற்சாலை தீ விபத்து சம்பவம்: உயிரிழப்பு 4-ஆக அதிகரிப்பு

ஃபரீதாபாதின் முஜேசரில் உள்ள தொழில்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 4-ஆக அதிகரிப்பு

News image
பலி- பிரதிப் படம்
Updated On :21 பிப்ரவரி 2026, 9:29 pm

தினமணி செய்திச் சேவை

ஃபரீதாபாதின் முஜேசரில் உள்ள தொழில்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த உதவி காவல் ஆய்வாளா் மற்றும் தீயணைப்பு வீரா் உயிரிழந்த நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

கல்காஜி லுப்ரிகன்ட்ஸ் மற்றும் சிவ் ஸ்டீல் நிறுவனத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட 37 போ் காயமடைந்தனா். தொழில்சாலையில் இருந்த ரசாயனம் நிரப்பப்பட்ட டிரம்புகளில் தீப்பொறி விழுந்த நிலையில், அவை தொடா்ச்சியாக வெடித்தது. இந்தச் சம்பவத்தில் தொழில்சாலையின் உரிமையாளா் விஜய் மோகாவின் மகன் அபிஷேக் மோகா மற்றும் தொழில்சாலை பணியாளா் பிரதீப் குமாா் ஆகியோருக்கு தீ விபத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக தீக்காயங்கள் ஏற்பட்டன. தில்லி சஃப்தா்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் கடந்த வியாழக்கிழமை இரவில் உயிரிழந்தனா்.

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா் பவிசந்த், முஜேசா் காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளா் ரவி ஆகியோருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில், தில்லி சஃப்தா்ஜங் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்தனா். இந்நிலையில், பவிசந்த் வெள்ளிக்கிழமை இரவிலும் ரவிகுமாா் சனிக்கிழமை காலையிலும் உயிரிழந்தனா்.

இந்த தீ விபத்து சம்பவம் தொடா்பாக உரிமையாளா் விஜய் மோகா மீது வழக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரும் விபத்தில் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த பத்கல் துணை கோட்ட ஆட்சியா் தலைமையில் 7 போ் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சிறிய அளவில் காயமடைந்த நபா்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். எஞ்சிய நபா்களுக்கு சஃப்தா்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.