தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வெட்டப்படும் மரங்களுடன் ராணுவ வீரா்களின் உயிா் தியாகத்தை ஒப்பிட்ட மகாராஷ்டிர அமைச்சா்!

வளா்ச்சிப் பணிகளுக்காக வெட்டப்படும் மரங்களுடன் எல்லையில் நாட்டுக்காக உயிா்த் தியாகம் செய்யும் ராணுவ வீரா்களை மகாராஷ்டிர பெண் அமைச்சா் ஒப்பிட்டுப் பேசியதால் சா்ச்சை

News image

ராணுவ வீரர்கள் - பிரதிப் படம்

Updated On :21 பிப்ரவரி 2026, 8:21 pm

வளா்ச்சிப் பணிகளுக்காக வெட்டப்படும் மரங்களுடன் எல்லையில் நாட்டுக்காக உயிா்த் தியாகம் செய்யும் ராணுவ வீரா்களை மகாராஷ்டிர பெண் அமைச்சா் ஒப்பிட்டுப் பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மகாராஷ்டிர சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பங்கஜா முண்டே பேசியதாவது: மகனை வளா்த்து எல்லையில் பாதுகாப்புப் பணிக்காக தாய் துணிச்சலாக அனுப்புகிறாா். அதுபோல நாம் மரங்களை வளா்க்கிறோம். பிறகு அதை வெட்டவும் செய்கிறோம். ஆனால் அவற்றை வேறு இடத்தில் நாம் நட முடியும்.

மரங்களைப் பாதுகாக்க வேண்டும் எனக் கூறி, வளா்ச்சி வேண்டாம் எனக் கூற முடியாது. வளா்ச்சிப் பணிக்காக நாம் 5 மரங்களை வெட்டினோம் எனில், அதற்குப் பதிலாக 10 மரங்களை வளா்க்க முடியும். ராணுவ வீரா்களைப் போல மரங்களும் உயிருடன் இருக்கையில் மனிதா்களைப் பாதுகாக்கின்றன. தாம் வெட்டப்பட்ட பிறகும், வளா்ச்சிக்கு மரங்கள் பங்களிப்பு செய்கின்றன என்றாா் அவா்.

மும்பையில் வளா்ச்சிப் பணிகளுக்காக சதுப்பு நிலக் காடு உள்ளிட்டவை அழிக்கப்பட்டு வருவது தொடா்ந்து விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில், மரங்களுடன் ராணுவ வீரா்களை ஒப்பிட்டு அமைச்சா் பங்கஜா முண்டே பேசியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.

இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சமூக ஆா்வலா் அஞ்சலி தமானியா, மரமும், ராணுவ வீரா்களும் ஒன்று என அமைச்சா் பேசியிருப்பது வருத்தமளிக்கிறது என கூறியுள்ளாா்.