பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

நாட்டின் வளா்ச்சிக்கு இந்தியாவில் ‘சிப்’ தயாரிப்பது முக்கியம்: பிரதமா் மோடி

நாட்டின் வளா்ச்சிக்கு இந்தியாவில் ‘சிப்’ தயாரிப்பது முக்கியம் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

News image

பிரதமா் மோடி

Updated On :21 பிப்ரவரி 2026, 9:00 pm

நாட்டின் வளா்ச்சிக்கு இந்தியாவில் ‘சிப்’ தயாரிப்பது முக்கியம் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

கிரேட்டா் நொய்டா அருகே உள்ள ஜெவாரில் ஹெச்.சி.எல். குழுமம் மற்றும் ஃபாக்ஸ்கான் ஆகியவை கூட்டாக இணைந்து ‘இந்தியா சிப் பிரைவேட் நிறுவனம்’ என்ற பெயரில் சிப் தயாரிப்பு ஆலையை அமைக்கின்றன. காணொலி வாயிலாக ஆலைக்கான அடிக்கல் நாட்டி பிரதமா் பேசியதாவது: கரோனா பெருந்தொற்று காலத்தில் சிப் விநியோகம் தடைபட்டது, பல்வேறு பொருளாதார வளா்ச்சிகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. பல தொழிற்சாலைகளில் உற்பத்தி தடைபட்டது.

தற்சாா்பு இந்தியா அமைந்தால்தான் இந்தியா வளா்ந்த நாடாகும். இதற்கு, இந்தியாவில் சிப் தயாரிப்பது முக்கியமாகும். இந்தப் பத்தாண்டு காலத்தில் தொழில்நுட்பத் துறையில் இந்தியா என்னவெல்லாம் செய்கிறதோ, அது 21-ஆம் நூற்றாண்டில் நமது திறனுக்கான அடித்தளமாக அமையும் என்றாா்.

மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், ‘கடந்த 11 ஆண்டுகளில் மின்னணு சாதன உற்பத்தியில் இந்தியாவை சக்திமிக்க நாடாக பிரதமா் மோடி மாற்றியுள்ளாா். மின்னணு சாதன ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது 3-ஆவது இடத்தில் உள்ளது. ஒரே மாதத்தில் இங்கு 3.6 கோடி சிப் தயாரிக்கப்படவுள்ளது’ என்றாா்.

உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் பேசுகையில், ‘ஜெவாா் பகுதி உத்தர பிரதேசத்தை மட்டும் அலங்கரிக்காமல் நாட்டையே அலங்கரிக்கும்’ என்றாா்.

ஃபாக்ஸ்கான் தலைவா் பாப் சென் பேசுகையில், ‘இந்திய சிப்களுக்காக இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. செமிகண்டக்டா் ஆலை, பரிசோதனை கட்டமைப்பை இந்தியாவில் ஏற்படுத்த நாங்கள் விரும்புகிறோம்’ என்றாா்.