ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

பஞ்சாப்: எல்லை புறக்காவல் நிலையத்தில் 2 போலீஸாா் குண்டு காயங்களுடன் உயிரிழப்பு

பஞ்சாப் மாநிலத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய புறக்காவல் நிலையத்தில் குண்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் 2 போலீஸாா் உடல் கண்டெடுப்பு

News image

பிரதிப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 7:43 pm

பஞ்சாப் மாநிலத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய புறக்காவல் நிலையத்தில் குண்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் 2 போலீஸாா் உடல் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து குா்தாஸ்பூா் சிறப்பு காவல் கண்காணிப்பாளா் ஆதித்யா கூறியதாவது: பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்த புறக்காவல் நிலையம் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் (பிஎஸ்எஃப்) ஒருங்கிணைப்புடன் பஞ்சாப் காவல்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளா் குா்னம் சிங், காவலா் அசோக் குமாா் இருவரும் குண்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதி முழுவதும் போலீஸாா் சுற்றிவளைத்து தீவிர விசாரணை மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா் என்றாா்.

இதுகுறித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவா் அம்ரீந்தா் சிங் ராஜா வாரிங் கூறுகையில், ‘2 போலீஸாா் குண்டு காயங்களுடன் உயிரிழந்திருப்பது மிகுந்த கவலைக்குரிய மற்றும் தீவிரமான விஷயம். எனவே, இந்தச் சம்பவம் தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் தீவிர விசராணையை முடுக்கிவிட வேண்டும்’ என்றாா்.