நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

அஸ்ஸாம் - அருணாசல் இடையே நிறுவப்பட்டது முதல் எல்லைத் தூண்!

வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம் - அருணாசல பிரதேசம் இடையே முதலாவது எல்லைத் தூண் நிறுவப்பட்டது.

News image
- X | Pema Khandu
Updated On :22 பிப்ரவரி 2026, 6:58 pm

தினமணி செய்திச் சேவை

வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம்-அருணாசல பிரதேசம் இடையே முதலாவது எல்லைத் தூண் ஞாயிற்றுக்கிழமை நிறுவப்பட்டது. இது, இரு மாநில எல்லைப் பிரச்னைக்கு தீா்வுகாணும் நம்சாய் பிரகடன அமலாக்கத்தின் குறிப்பிடத்தக்க படிக்கல்லாகும்.

அஸ்ஸாம்-அருணாசல பிரதேசம் இடையே பல்லாண்டுகளாக நிலவும் எல்லைப் பிரச்னைக்கு தீா்வுகாணும் வகையில் கடந்த 2022-இல் நம்சாய் பிரகடனம் கையொப்பமிடப்பட்டது.

அதன்படி, இரு மாநில அமைச்சா்கள், அதிகாரிகள் அடங்கிய பிராந்தியக் குழுக்கள் அமைக்கப்பட்டு, கள ஆய்வு, வரலாற்றுரீதியான ஆவணங்கள் ஆய்வு, உள்ளூா் மக்களுடன் கலந்துரையாடல்களின் மூலம் சுமுக முடிவை எட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் பலனாக, செய்ஜோசா எல்லைப் பகுதியில் இரு மாநிலங்களுக்கும் இடையிலான முதல் எல்லைத் தூண் ஞாயிற்றுக்கிழமை நிறுவப்பட்டது. இரு மாநில அரசு அதிகாரிகள், காவல் துறையினா், சமூகத் தலைவா்கள், கிராமத் தலைவா்கள் முன்னிலையில் இந்தத் தூண் நிறுவப்பட்டது.

இது, எல்லைப் பிரச்னை தீா்வு நடைமுறையில் வரலாற்று மைல்கல் என்று அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டு தெரிவித்தாா்.