
கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!
கொச்சியில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் 38-வது தேவி விருதுகள் விழா சனிக்கிழமை (பிப்.21) நடைபெற்றதைப் பற்றி...

மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி (நடுவில்), தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி லட்சுமி மேனன் (இடமிருந்து இரண்டாவதாக), ஆசிரியர் கிரண் பிரசாத், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா (வலமிருந்து இரண்டாவதாக). உடன் விருது பெற்ற தேவிகள் சொசம்மா லைப், ராதாமணியம்மா, நளினி சந்திரன், பாரிஸ் லட்சுமி, பி.எஸ். ஜலஜா, ஏ. சீமா, அபயா ஹிரண்மயி, ரேஷ்மா சுரேஷ், பி. பானுமதி, கபிலா வேணு மற்றும் லிட்டி சாக்கோ. - (படம்: எக்ஸ்பிரஸ் நியூஸ் சர்வீஸ்)
கொச்சியில் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தின் 38-வது தேவி விருதுகள் விழா சனிக்கிழமை (பிப். 21) நடைபெற்றது.
கேரளத்தின் கொச்சியில் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தின் 38-வது தேவி விருதுகள் விழா நேற்று மரைன் டிரைவில் உள்ள ஹோட்டல் தாஜ் விவான்டாவில் நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த கேரளத்தைச் சேர்ந்த 11 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு, பெண் சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி லட்சுமி மேனன், முன்னாள் மத்திய அமைச்சர் பேராசிரியர் கே.வி. தாமஸ், ஆசிரியர் கிரண் பிரசாத் ஆகியோர் உடனிருந்தனர்.
விருது பெற்றவர்கள்
கலை, விளையாட்டு, சினிமா, அறிவியல், கல்வி, சமூக சேவை மற்றும் வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆற்றிய பங்களிப்புகளுக்காக விருதுகள் வழங்கப்பட்டன.
இதில், சொசம்மா லைப், ராதாமணியம்மா, நளினி சந்திரன், பாரிஸ் லட்சுமி, பி.எஸ். ஜலஜா, ஏ. சீமா, அபயா ஹிரண்மயி, ரேஷ்மா சுரேஷ், பி. பானுமதி, கபிலா வேணு மற்றும் லிட்டி சாக்கோ உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
Summary
On Saturday, as the twilight sky changed colours, a constellation of stars converged in Kochi for the 38th edition of The New Indian Express Group’s Devi Awards at Taj Vivata on Marine Drive.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






