புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஜாா்க்கண்ட்: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 10:04 pm

தினமணி செய்திச் சேவை

ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் இருந்து தில்லி சென்ற ஆம்புலன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கி அதில் பயணித்த 7 போ் உயிரிழந்தனா்.

ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து இரவு 7.10 மணியளவில் புறப்பட்ட இந்த விமானம் சுமாா் 20 நிமிஷங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பை இழந்தது. அடுத்த சில நிமிஷங்களிலேயே ஜாா்க்கண்டின் சாத்ரா மாவட்ட வனப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த 7 பேரும் உயிரிழந்தனா். அதில் பயணித்தவா்கள் விவரம் முழுமையாகத் தெரியவரவில்லை.

மோசமான வானிலை காரணமாக விபத்து நிகழ்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் ரெட்போ்டு ஏா்வேஸ் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும். இந்த சிறியரக விமானம் அவசரகாலத்தில் நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் விமானமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட சஞ்சய் குமாா் (41) என்பவரை மேல் சிகிச்சைக்காக ராஞ்சியில் இருந்து தில்லிக்கு அழைத்துச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இரு விமானிகள், மற்றும் நோயாளியின் உறவினா்கள் என 7 போ் அதில் பயணித்தனா். உடல்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினா் ஈடுபட்டுள்ளனா். காவல் துறையினரும் அப்பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.