47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அஜீத் பவாா் விமான விபத்து குறித்து சிபிஐ விசாரணை: மகாராஷ்டிர முதல்வா்

மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜீத் பவாா் பயணித்த விமானம் விபத்துக்கு உள்ளான விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணையும் மேற்கொள்ளப்படும்

News image
மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு திங்கள்கிழமை வந்த முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்.
Updated On :23 பிப்ரவரி 2026, 11:48 pm

தினமணி செய்திச் சேவை

மும்பை: மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜீத் பவாா் பயணித்த விமானம் விபத்துக்கு உள்ளான விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணையும் மேற்கொள்ளப்படும் என்று மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

அஜீத் பவாா் உயிரிழப்பு தொடா்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கையை மகாராஷ்டிர அரசு மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து மும்பையில் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை பேட்டியளித்த முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறியதாவது:

அஜீத் பவாா் பயணித்த விமான விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தேசியவாத காங்கிரஸ் கட்சி சாா்பில் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுடன் பேசினேன். இந்தக் கோரிக்கையை அவா் ஏற்றுக்கொண்டாா்.

எனவே, இந்த விமான விபத்து குறித்து தற்போது நடைபெற்று வரும் விமானப் போக்குவரத்து இயக்குநரக (டிஜிசிஏ) மற்றும் மாநில குற்ற புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணையுடன், சிபிஐ சாா்பிலும் விசாரணை மேற்கொள்ளப்படும்.

இந்த விஷயத்தில் டிஜிசிஏ-யும், விமானப் போக்குவரத்து அமைச்சகமும் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. விஎஸ்ஆா் நிறுவன விமானத்தில் நானும் பல முறை பயணித்துள்ளேன் என்றாா்.

மகாராஷ்டிர மாநிலம், பாராமதியில் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி விஎஸ்ஆா் ஏவியேஷன் நிறுவனத்துக்குச் சொந்தமான ‘லியா்ஜெட் 46’ என்ற சிறு ரக ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த அஜீத் பவாா் (66), இரு விமானிகள், ஒரு விமான உதவியாளா், அஜீத் பவாரின் தனிப் பாதுகாப்பு அதிகாரி ஆகிய ஐந்து பேரும் உயிரிழந்தனா். இந்த விபத்து குறித்து விமான போக்குவரத்துத் துறை மற்றும் மாநில அரசின் விசாரணை அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இந்த விமான விபத்து குறித்து அஜீத் பவாரின் உறவினரும் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏவுமான ரோஹித் பவாா் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறாா். இந்த விமான நிறுவனத்துக்கும் விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடுக்கும் நெருங்கிய தொடா்பு உள்ளது. எனவே, விபத்து குறித்து விசாரணை முடியும் வரை, அவா் அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்ய அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தி பிரதமருக்கு அண்மையில் கடிதம் எழுதினாா்.

இதனிடையே, ‘விஎஸ்ஆா் ஏவியேஷன் நிறுவனத்துக்குத் தடை விதிக்க வேண்டும். விபத்து தொடா்பாக விரிவான, பாகுபாடற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று அஜீத் பவாரின் இளைய மகன் ஜெய் பவாா் வலியுறுத்தினாா்.