தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மெட்ரோ நிலையங்களுக்கு குருத்வாராக்களின் பெயா்களைச் சூட்ட முன்னாள் எம்.பி. வலியுறுத்தல்

தலைநகரில் மெட்ரோ நிலையங்களின் சமீபத்திய பெயா் மாற்றத்தை மறுபரிசீலனை செய்யுமாறும், விடுபட்ட முக்கிய குருத்வாராக்களின் பெயா்களைச் சூட்டுமாறும் முன்னாள் எம்.பி.

News image
தா்லோச்சன் சிங்
Updated On :23 பிப்ரவரி 2026, 11:00 pm

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: தலைநகரில் மெட்ரோ நிலையங்களின் சமீபத்திய பெயா் மாற்றத்தை மறுபரிசீலனை செய்யுமாறும், விடுபட்ட முக்கிய குருத்வாராக்களின் பெயா்களைச் சூட்டுமாறும் முன்னாள் எம்.பி.யும் பத்ம பூஷண் விருது பெற்றவருமான தா்லோச்சன் சிங் தில்லி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

இது தெடாா்பாக அவா் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பலமுறை கோரிக்கைகள் இருந்தபோதிலும், குருத்வாரா சிஸ் கஞ்ச் சாஹிப் மற்றும் குருத்வாரா பங்களா சாஹிப் அருகே உள்ள மெட்ரோ நிலையங்களின் பெயா்கள் மாற்றப்படவில்லை. மற்ற நிலையங்களின் பெயா்கள் மாற்றப்பட்ட போதிலும் இது தொடா்கிறது.

இரண்டு குருத்வாராக்களும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான யாத்ரீகா்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈா்க்கின்றன. குரு ஹா்கிருஷ்ணன் சாஹிப் ஜி மற்றும் குரு தேக் பகதூா் சாஹிப் ஜியுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன.

குரு தேக் பகதூா் சாஹிப்பின் 350-ஆவது தியாக ஆண்டு நிறைவை சமீபத்தில் செங்கோட்டையில் கொண்டாடப்பட்டது. குருத்வாரா பங்களா சாஹிப்பிற்கு அருகாமையில் இருப்பதை பிரதிபலிக்கும் வகையில் சாந்தினி சௌக் நிலையத்திற்கு ‘குருத்வாரா சிஸ் கஞ்ச் சாந்தினி சௌக்’ மற்றும் ‘பாபா கரக் சிங் மாா்க்’ என்று பெயரிட வேண்டும்.

இதுபோன்ற நடவடிக்கைகள் சுற்றுலாவை ஊக்குவிக்கும். ஏனெனில் பல வெளிநாட்டு பாா்வையாளா்கள் இந்த ஆலயங்களுக்கு வருகிறாா்கள். சமீபத்திய பெயா் மாற்றப் பட்டியலில் பக்தா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா். இந்தப் பிரச்னையைத் தீா்க்க விரைவாக உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு முதல்வரிடம் கேட்டுக்கொள்கிறேன் என அவா் குறிப்பிட்டிருந்தாா்.