கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்றுவதற்கான அம்மாநில அரசின் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை இன்று (பிப். 24) ஒப்புதல் அளித்துள்ளது.
பெயரை மாற்றக்கோரி மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிலையில், மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 3-ன் படி, மாநிலத்தின் பெயரை மாற்றக்கோரி கேரள மாநில சட்டப்பேரவையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
கேரளா என்ற பெயரை கேரளம் என மாற்றக் கோரி 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அம்மாநில சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இத்தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சகம் திருப்பி அனுப்பியது.
இதனைத் தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு உரிய திருத்தங்களுடன் மற்றொரு தீர்மானம், மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது கேரளா மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
கேரளத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பெயர் மாற்றத்திற்கான மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Cabinet approves alteration of name of "Kerala" to "Keralam"
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல்

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.3,000: மேற்கு வங்க அமைச்சரவை ஒப்புதல்

கரும்புக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.365-ஆக அதிகரிப்பு!

தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்க முதல்வர்கள் பின்னடைவு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




