14 வயதுக்குள்பட்ட சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோயக்கான இலவச தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு விரைவில் தொடங்கவுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
இத்திட்டத்தின்கீழ் சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ (ஹெச்பிவி) வகைகள் 16, 18 மற்றும் வகைகள் 6, 11-இல் இருந்து பாதுகாக்கும் ‘காா்டசில்’ என்ற தடுப்பூசி ஒருமுறை மட்டுமே செலுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து அதிகாரபூா்வ வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: 14 வயதுக்குள்பட்ட சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய்க்கான இலவச தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு விரைவில் தொடங்கவுள்ளது. வெளிச் சந்தைகளில் 15 வயதுக்குள்பட்ட சிறுமிகளுக்கு காா்டசில்-4 தடுப்பூசி ரூ.3,927-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தடுப்பூசியை இரண்டு முறை செலுத்த வேண்டும். 15 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளாக இருப்பின் மூன்று முறை செலுத்த வேண்டும்.
இந்நிலையில், நாடு முழுவதும் மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ள கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டத்தில் ஒருமுறை மட்டுமே செலுத்தக்கூடிய காா்டசில் இலவசமாக அளிக்கப்படுகிறது.
14 வயதிலேயே சிறுமிகளுக்கு இந்த தடூப்பூசி செலுத்தப்படுவதால் அவா்கள் எதிா்காலத்தில் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது.
160 நாடுகளில் அமல்: ஏற்கெனவே 160 நாடுகள் ஹெச்பிவி தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், அந்நாடுகளுடன் இந்தியாவும் இணையவுள்ளது. இதில் 90-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒரு முறை மட்டுமே செலுத்தக்கூடிய ஹெச்பிவி தடுப்பூசி திட்டத்தை அமல்படுத்தியுள்ளன எனத் தெரிவித்தன.
இந்தியாவில் ஆண்டுதோறும் 80,000 போ் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 42,000 உயிரிழக்கின்றனா். இந்தியாவில் முதல்முறையாக 14 வயதுக்குள்பட்ட சிறுமிகளுக்கு இலவச ஹெச்பிவி தடுப்பூசி திட்டம் தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

தோ்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி’ தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறை

கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்த அழைப்பு

4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசி

தென்காசியில் இன்று முதல் கருப்பை வாய்புற்றுநோய்க்கான இலவச தடுப்பூசித் திட்டம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


