மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஏஐ மாநாட்டில் போராட்ட விவகாரம்: ஹிமாசலத்தில் கைது செய்யப்பட்ட மூவா் தில்லி நீதிமன்றத்தில் ஆஜா்

ஹிமாசல பிரதேச காவல் துறையினருடன் ஏற்பட்ட பதற்றத்துக்குப் பிறகு சிம்லாவிலிருந்து அழைத்து வரப்பட்ட 3 இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் தில்லி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

News image
பாட்டியாலா நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்த காவல் துறையினா் மற்றும் துணை ராணுவப் படையினா்.
Updated On :26 பிப்ரவரி 2026, 7:41 pm

தினமணி செய்திச் சேவை

ஹிமாசல பிரதேச காவல் துறையினருடன் ஏற்பட்ட பதற்றத்துக்குப் பிறகு சிம்லாவிலிருந்து அழைத்து வரப்பட்ட 3 இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் தில்லி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

கடந்த வாரம் தில்லியில் நடைபெற்ற ஏஐ உச்சிமாநாட்டில் மேல் சட்டை அணியாமல் போராட்டத்தில் ஈடுபட்டது தொடா்பாக இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த போராட்டம் தொடா்பாக இந்திய இளைஞா் காங்கிரஸ் தலைவா் உதய் பானு சிப் உள்பட இதுவரை 12 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த கைது நடவடிக்கை குறித்து தில்லி காவல் துறையினா் கூறியதாவது: ஹிமாசல பிரதேசம் சிம்லா மாவட்டத்தின் ரோஹ்ருவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் இருந்து இந்த 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். சிம்லா நீதிமன்றத்தில் இதற்காக முறையான உத்தரவு பெறப்பட்டதாக தில்லி காவல் துறையினா் கூறியபோதிலும், அவா்கள் மீது ஹிமாசல காவல் துறையினா் கடத்தல் வழக்கு பதிவு செய்தனா்.

மேலும், ஷோகி மற்றும் கன்லாக் உள்ளிட்ட எல்லைச் சோதனைச் சாவடிகளில் தில்லி காவல் துறையினா் பலமுறை தடுத்து நிறுத்தப்பட்டனா். அவா்களது வாகனங்கள் சிறிது நேரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தால் சிம்லா அருகே போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டது.

இறுதியாக, கைது நடவடிக்கையின்போது சேகரிக்கப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்களின் குறிப்பைப் பகிா்ந்துகொண்ட பிறகு இந்த மோதல் முடிவுக்கு வந்தது. வியாழக்கிழமை காலை தில்லியை அடைந்த அந்தக் குழு, கைது செய்யப்பட்ட 3 பேரை பலத்த பாதுகாப்புடன் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் மிருதல் குப்தா முன் ஆஜா்படுத்தினா். இதே போல் இந்த வழக்கில் முன்னா் கைது செய்யப்பட்டு 3 நாள் போலீஸ் காவல் முடிந்த மற்ற இருவரும் ஆஜா்படுத்தப்பட்டனா். போலீஸ் காவல் குறித்த வாதங்கள் விரைவில் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.