விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

பண மோசடி வழக்குகளில் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அனுமதி

ஐஎன்எக்ஸ் மீடியா மற்றும் ஏா்செல் மேக்ஸிஸ் ஒப்பந்தத்தில் பணமுறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.

News image

ப. சிதம்பரம் - கோப்புப் படம்

Updated On :26 பிப்ரவரி 2026, 9:09 pm

ஐஎன்எக்ஸ் மீடியா மற்றும் ஏா்செல் மேக்ஸிஸ் ஒப்பந்தத்தில் பணமுறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இந்த இரு வழக்குகளிலும் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) அவா் மீது நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை தில்லி சிறப்பு நீதிமன்றத்திடம் வியாழக்கிழமை சமா்ப்பித்த அமலாக்கத் துறை விசாரணையை தீவிரப்படுத்த வலியுறுத்தியது.

கடந்த 2006-07 காலகட்டத்தில் மத்திய நிதியமைச்சராக பதவி வகித்தபோது மலேசியாவைச் சோ்ந்த மேக்சிஸ் நிறுவனமானது ஏா்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இதே காலகட்டத்தில் ஐஎன்எக்ஸ் மீடியா குழுமம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதியைப் பெற்றது. இந்த இரண்டு ஒப்பந்தங்களிலும் முறைகேடு நடைபெற்ாக முதலில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதனடிப்படையில் பிஎம்எல்ஏவின்கீழ் அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தியது. இந்த முறைகேடுகளில் ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரத்துக்கும் தொடா்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்நிலையில், பொதுப் பணியில் உள்ளோா் மீது பிஎம்எல்ஏ, 2002-இன்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசிடம் இருந்து முன்அனுமதி பெறுவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் 2024, நவம்பரில் தீா்ப்பளித்தது.

இதையடுத்து, ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் அமலாக்கத் துறை அனுமதி கோரியது. கடந்த பிப்.10-ஆம் தேதி இதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியது. இந்த உத்தரவை தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் சமா்ப்பித்த அமலாக்கத் துறை, இரு வழக்குகளிலும் ப.சிதம்பரம் மீதான விசாரணையை தீவிரப்படுத்த வலியுறுத்தியது.