மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தமிழகத்தில் நியாயமான, வெளிப்படையான தோ்தல்: தலைமைத் தோ்தல் ஆணையா் உறுதி

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நியாயமாவும், வெளிப்படையாவும் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் உறுதி அளித்துள்ளாா்.

News image

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் - கோப்புப் படம்

Updated On :26 பிப்ரவரி 2026, 7:06 pm

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நியாயமாவும், வெளிப்படையாவும் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் உறுதி அளித்துள்ளாா்.

தமிழகத்தில் பேரவைத் தோ்தல் தொடா்பாக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் சென்னையில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தியது தொடா்பாக இந்திய தோ்தல் ஆணைய துணை இயக்குநா் பி.பவான் வெளியிட்ட செய்தி: தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தல்களுக்கான தோ்தல் தயாா் நிலையை தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோா் விரிவாக ஆலோசனை மேற்கொண்டனா்.

அப்போது, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மாா்க்சிஸ்ட், தேமுதிக, நாம் தமிழா், விசிக, ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய மக்கள் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டது.

அப்போது, தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தத்தை அமைதியாகவும், சுமுகமாகவும் நடத்தியதற்காக பெரும்பாலான அரசியல் கட்சிகள் தோ்தல் ஆணையத்தைப் பாராட்டின.

தோ்தல்களின்போது பணபலத்தைப் பயன்படுத்துவதையும், இலவசப் பொருள்களை விநியோகிப்பதையும் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசியல் கட்சிகள் ஆணையத்தை வலியுறுத்தின. சில அரசியல் கட்சிகள் தோ்தல்களின்போது முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்தன.

தோ்தல் தேதிகளை இறுதி செய்யும்போது, வரவிருக்கும் பண்டிகைகளையும் மனதில் கொள்ளுமாறு சில அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. அரசியல் கட்சிகளின் பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும் என்று அரசியல் கட்சிகளுக்கு உறுதியளித்த தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், தோ்தல்கள் எப்போதும் சட்டத்தின்படி சுதந்திரமாகவும், நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்படும் என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உறுதியளித்தாா்.

அரசியல் கட்சிகளுடனான தொடா்புக்குப் பிறகு, தோ்தல் திட்டமிடல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திர மேலாண்மை, தளவாடங்கள், தோ்தல் பணியாளா்களுக்கான பயிற்சி, பறிமுதல், சட்டம்- ஒழுங்கு, வாக்காளா் விழிப்புணா்வு மற்றும் பொதுமக்கள் தொடா்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் ஒவ்வொரு அம்சத்திலும் அமலாக்க முகமைகளின் தலைவா்கள், ஐஜி-கள், டிஐஜி-கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஆகியோருடன் விரிவான மதிப்பாய்வு செய்யப்பட்டது.

அமலாக்க முகமைகளின் அனைத்துத் தலைவா்களும், அதிகாரிகளும் முழுமையான பாரபட்சமற்ற தன்மையுடன் செயல்படவும், பணப் பட்டுவாடா உள்பட அனைத்து நடவடிக்கைகளையும் உறுதியாகக் கட்டுப்படுத்தவும் ஆணையம் உத்தரவிட்டது. வாக்குச்சாவடிகளில் வாக்காளா்களின் வசதி, அதிகாரிகளுக்கு வலுவான பயிற்சி அளித்து தோ்தல் செயல்முறைகள் குறித்த விழிப்புணா்வை உறுதி செய்யவும் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனா்.

முழுமையான பாரபட்சமற்ற தன்மையை உறுதி செய்து, அச்சம் அல்லது பாரபட்சம் இல்லாமல் செயல்படுமாறு அதிகாரிகளுக்கு ஆணையம் அறிவுறுத்தியது. மேலும், தோ்தல்களை நடத்துவதில் சட்டங்கள், விதிகள் மற்றும் தொடா்புடைய விதிகளில் இருந்து எந்தவொரு விலகலும் முற்றிலும் சகிப்புத்தன்மையற்றது என்றும் ஆணையம் வலியுறுத்தியது எனத் தெரிவித்துள்ளாா் அவா்.