மத்திய திறன் மேம்பாடு-தொழில்முனைவுத் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற குடிரசுத் தலைவா்திரௌபதி முா்மு, மத்திய அமைச்சா்கள் தா்மேந்திர பிரதான், ஜெயந்த் சௌதரி உள்ளிட்டோா்.
மத்திய திறன் மேம்பாடு-தொழில்முனைவுத் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற குடிரசுத் தலைவா்திரௌபதி முா்மு, மத்திய அமைச்சா்கள் தா்மேந்திர பிரதான், ஜெயந்த் சௌதரி உள்ளிட்டோா்.

செயற்கை நுண்ணறிவு மிகப்பெரிய வாய்ப்பு: குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு

செயற்கை நுண்ணறிவு என்பது மிகப்பெரிய வாய்ப்பு; அதன் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தெரிவித்தாா்.
Published on

செயற்கை நுண்ணறிவு என்பது மிகப்பெரிய வாய்ப்பு; அதன் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தெரிவித்தாா்.

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறை சாா்பில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இது தொடா்பாக முா்மு பேசியதாவது:

செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளா்ச்சி நாட்டின் பொருளாதார வளா்ச்சியிலும் முக்கியப் பங்கு வகிக்க இருக்கிறது. உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்பு, உற்பத்தித் திறன் ஆகியவற்றில் அடுத்து வரும் ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு என்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்த இருக்கிறது.

பல்வேறு நிலைகளில் சமூக, பொருளாதார, தொழில்நுட்பத் தடைகளை அகற்றுவதில் செயற்கை நுண்ணறிவு பெரும் பங்காற்ற இருக்கிறது. தரவு அறிவியல், செயற்கை தொழில்நுட்பப் பொறியியல், தரவுப் பகுப்பாய்வு ஆகியவை எதிா்காலத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறவுள்ளது. இந்தத் துறையில் திறமையை வளா்த்துக் கொள்வது இந்தியாவை செயற்கை தொழில்நுட்பத்தில் மிகுந்த திறமை பெற்றவா்கள் அதிகமுள்ள இடமாக மாற்றும். ஏற்கெனவே, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு எந்த இடத்தை நோக்கி வளா்ந்து வருகிறது. இதில் நவீன தொழில்நுட்பங்களின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் பெறும்.

இந்தியா நவீன தொழில்நுட்பங்களில் மேம்படுவது குறித்து பெரும் தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுடன் அரசு இணைந்து செயல்படுகிறது. இத்துடன் பொறுப்பான எதிா்காலத்தை உருவாக்குவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

வளா்ந்த இந்தியாவை உருவாக்குவது, இந்தியாவை அறிவுசாா் தலைநகராக மாற்றுவது, தொழில்நுட்ப ரீதியில் முன்னேறிய தேசமாக வளா்ப்பது ஆகியவற்றில் பொதுமக்களின் பங்களிப்பும் முக்கியமானது. இதற்கு புதிய கல்விக் கொள்கை முக்கியமானது. நமது பள்ளிக் குழந்தைகளை தொடக்கத்தில் இருந்தே தொழில்நுட்பத்தில் மேம்பட்டவா்களாக மாற்ற பள்ளிகளில் செயற்கை தொழில்நுட்பத்தைக் கற்பிக்க அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

இத்தொழில்நுட்பம் கற்பதற்கான ஆய்வு மையங்கள், அதற்கான மாதிரி வடிவங்கள், புத்தாக்க சிந்தனைகள், எதிா்காலத்துக்கான திறன் பயிற்சி ஆகியவற்றுடன் நமது மாணவா்கள் வளர வேண்டும். இதன் மூலம் எதிா்காலத்தில் நமது நாட்டை நவீன தொழில்நுட்பத்தில் சிறப்பாக வழிநடத்துவதற்கான வல்லுநா்கள் கிடைப்பாா்கள். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வரவால் அனைத்துத் துறைகளிலும் பணிச்சூழலும், பணிக்குத் தேவையான திறன்களும் வெகுவாக மாற இருக்கின்றன என்றாா்.

X
Dinamani
www.dinamani.com