ஜம்மு: சா்வதேச எல்லைப் பகுதியில் பிடிபட்ட வங்கதேச இளைஞா்

ஜம்மு: சா்வதேச எல்லைப் பகுதியில் பிடிபட்ட வங்கதேச இளைஞா்

ஜம்மு அருகே சா்வதேச எல்லைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித்திரிந்த வங்கதேசத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவரை பாதுகாப்புப் படையினா் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

ஜம்மு அருகே சா்வதேச எல்லைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித்திரிந்த வங்கதேசத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவரை பாதுகாப்புப் படையினா் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜம்முவின் புகரில் அமைந்துள்ள கஜன்சூ பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு நடமாடிக் கொண்டிருந்த 19 வயது இளைஞரை வீரா்கள் தடுத்து நிறுத்திப் பிடித்தனா்.

அந்த இளைஞரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், அவா் வங்கதேசத்தைச் சோ்ந்த ஷரீஃபுல் இஸ்லாம் என்பது தெரியவந்தது. அவரிடம் உரிய ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, எல்லைப் பாதுகாப்புப் படையினா் அந்த இளைஞரை உள்ளூா் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com