

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான தைரியமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார்.
அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, சனிக்கிழமையில் செய்தியாளர்களுடன் பேசுகையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான தைரியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார்.
வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்கா அதிரடியாக கைது செய்ததை ஒவைசி குறிப்பிட்டுப் பேசினார். அதுபோலவே, 2008-ல் மும்பையில் 166 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமான லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட வேண்டும் என்று ஒவைசி கோரினார்.
ஒவைசியின் இந்தக் கருத்துக்கு பாஜக ஆதரவாளர்கள் சிலர் பாராட்டும் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.