

உத்தரப் பிரதேசத்தில் குளிா்காயும்போது திடீரென வலிப்பு ஏற்பட்டதால் நெருப்பில் விழுந்து நபர் ஒருவர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், பகோரா கிராமத்தில் சனிக்கிழமை இரவு பசவான் என்கிற கலு (50) என்பவர் கடும் குளிருக்கு நெருப்பு மூட்டி குளிர் காய்ந்திருக்கிறார். அப்போது அவருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்படவே குளிர் காய்ந்த நெருப்பிலேயே விழுந்து பலியானார்.
இதுகுறித்து காவல் அதிகாரி ராம் சரிக் கௌதம் கூறுகையில், " பசவான் என்கிற கல்லு (50) என்பவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்.
சனிக்கிழமை இரவு 8 மணியளவில் தனது வீட்டின் வெளியே குளிர்காய்வதற்காக நெருப்பு மூட்டி அமர்ந்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் நிலைதடுமாறி நெருப்பில் விழுந்துள்ளார்.
அந்த நேரத்தில் அவரது மனைவி ஜெய்தேய் வீட்டினுள் வேலை செய்து கொண்டு இருந்துள்ளார்.
சுமார் அரை மணி நேரம் கழித்து, உடல் கருகும் வாசனையை உணர்ந்த கிராம மக்கள் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தனர். அப்போது பசவான் தீயில் குப்புறக் கிடப்பதையும், அவரது உடலின் பாதி பகுதி பலத்த தீக்காயங்களுடன் இருப்பதையும் கண்டனர். ஏற்கெனவே அவர் பலியாகிவிட்டார்," என்றார்.
சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், உடல் கூராய்வு செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பசவானின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை இரவே செய்து முடிக்கப்பட்டன.
இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.