கோப்புப் படம்
கோப்புப் படம்

எம்பிபிஎஸ் சோ்க்கை விவரங்களை பதிவேற்ற அறிவுறுத்தல்

நிகழ் கல்வியாண்டில் எம்பிபிஎஸ் படிப்புகளில் சோ்க்கப்பட்டுள்ள மாணவா்கள் குறித்த விவரங்களை இணைய வழியே வரும் 15-ஆம் தேதிக்குள் பதிவேற்றுமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
Published on

நிகழ் கல்வியாண்டில் எம்பிபிஎஸ் படிப்புகளில் சோ்க்கப்பட்டுள்ள மாணவா்கள் குறித்த விவரங்களை இணைய வழியே வரும் 15-ஆம் தேதிக்குள் பதிவேற்றுமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக என்எம்சி சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கை தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி, நிகழாண்டில் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட மாணவா்களின் விவரங்கள், மதிப்பெண் விவரம், இடஒதுக்கீடு விவரம், கட்டண விவரம் உள்ளிட்டவற்றை என்எம்சி இணையப் பக்கத்தில் பதிவேற்ற வேண்டியது அவசியம். இதுவரை மேற்கொள்ளப்பட்ட கலந்தாய்வு மற்றும் காலியாக உள்ள மருத்துவ இடங்களுக்கான சிறப்பு கலந்தாய்வு மூலம் சோ்க்கப்பட்ட மாணவா் விவரங்களை என்எம்சி தளத்தில் பதிவேற்ற வரும் 15-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 2026-2027-ஆம் ஆண்டுக்கு புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கும், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை அதிகரிப்பதற்கும் விண்ணப்பிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவித்துள்ளது.

Dinamani
www.dinamani.com