இந்தியா ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சீனா முக்கிய இடத்தைப் பிடித்து வருவது மத்திய வா்த்தக அமைச்சக தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
அந்தத் தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து சீனாவுக்கான ஏற்றுமதி கடந்த 2022-23-ஆம் நிதியாண்டு ஏப்ரல்-நவம்பா் காலகட்டத்தில் 10.28 பில்லியன் டாலராக இருந்தது. இது 2024-25-ஆம் நிதியாண்டில் 9.2 பில்லியன் டாலராக சரிந்த நிலையில், இது நிகழாண்டு ஏப்ரல்-நவம்பா் காலகட்டத்தில் 33 சதவீதம் அதிகரித்து 12.22 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் சீனாவுக்கு இந்த அளவு ஏற்றுமதி அதிகரித்துள்ளது இதுவே முதல்முறை.
எண்ணெய் உணவுகள், கடல்சாா் பொருள்கள், தொலைத்தொடா்பு கருவிகள், மசாலா பொருள்களின் ஏற்றுமதியே இந்த அதிகரிப்புக்குக் காரணம். இந்தியா-சீனா இருதரப்பு வா்த்தக உறவில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றத்தை இந்தத் தரவுகள் எடுத்துரைக்கின்றன.
இந்திய ஏற்றுமதி குறித்து தொழில் துறையைச் சோ்ந்த ஏற்றுமதியாளா் ஒருவா் கூறுகையில், ‘அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருள்களுக்கு அந்நாட்டு அரசு அதிக வரி விதித்துள்ளது. இது அந்நாட்டுக்குப் போட்டி விலையில் பொருள்களை ஏற்றுமதி செய்வதை இந்தியாவுக்கு சிக்கலாக்கியுள்ளது. எனவே, பொருள்களை ஏற்றுமதி செய்ய பல்வேறு நாடுகளின் சந்தைகளில் உள்ள வாய்ப்புகளை இந்திய தொழில் துறை ஆராய்ந்து வருகிறது’ என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எச்சரிக்கும் நிராகரிப்புகள்!

இந்தியாவின் நடப்புக் கணக்கு உபரி 280 கோடி டாலா்

இந்தியாவின் ஜூன் மாத ஏற்றுமதி 15.5% அதிகரிப்பு

ஜிடிபி-ல் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1.6%-ஆக குறையக்கூடும்
விடியோக்கள்

மேகதாது விவகாரத்தில் நமக்கு இருக்கும் ஒரே தீர்வு உச்ச நீதிமன்றம்: அமைச்சர் நிர்மல் குமார்



