

‘என்டிடிவி’ நிறுவனர்கள் மீதான வரி ஏய்ப்பு புகாரில் வருமான வரித் துறைக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
என்டிடிவி நிறுவனா்களான பிரணாய் ராய், ராதிகா ராய் ஆகிய இருவரின் சொந்த நிறுவனமான ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங்க்ஸ் பிரவெட் லிமிடட் நிறுவனத்துக்காக விஷ்வப்பிரதான் கமர்சியல் பிரைவேட் லிமிடட் நிறுவனத்திடமிருந்து வட்டியில்லா கடன் தொகையாக ரூ. 403.85 கோடியை பெற்றதாகவும், அதன் தொடர்ச்சியாக ஆர்ஆர்பிஆர் நிறுவனத்தின் வழையே பங்குகள் விற்பனை மற்றும் தொடர்ச்சியாக பரிவர்த்தனைகள் முறைகேடாக நடைபெற்றதாகவும் அவற்றின் மூலம் வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பதாகவும் வருமான வரித்துறை கடந்த 2016இல் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தது. அவர்கள் இருவரும் முறைகேட்டில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2016இல் அவர்கள் இருவருக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில், வருமான வரித்துறையின் குற்ரச்சாட்டுகளின்படி வரி ஏய்ப்பு நடைபெறவில்லை என்றும் இதனை எதிர்த்து, தில்லி நீதிம்ன்றத்தில் கடந்த 2017இல் பிரணாய் ராய், ராதிகா ராய் ஆகியோர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தில்லி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை(ஜன. 19) நீதிபதிகள் தினேஷ் மேத்தா மற்றும் வினோத் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு மீண்டும் வந்தது. இந்த வழக்கின் விசாரணையில், வருமான வரித்துறையின் குற்றச்சாட்டுகள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் கால வரம்புக்குப் பிந்தைய தரவுகளின் அடிப்படையில் தவறுதலாக கணக்கிடப்பட்டிருப்பதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வருமான வரித்துறையின் நடவடிக்கையை நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்திலான நடவடிகையாகவே கருத முடியுமென தெரிவித்ததுடன் பிரணாய் ராய்க்கு ராதிகா ராய்க்கும் தலா ரூ. 1 லட்சம் வழங்க வருமான வரித்துறைக்கு அறிவுறுத்தியது. இத்தீர்ப்பில் முழு விவரங்கள், மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.