‘ஜனநாயகத்தை வலுப்படுத்த தூய்மையான வாக்காளா் பட்டியல் மிக முக்கியம்’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தெரிவித்தாா்.
பிகாரைத் தொடா்ந்து, தமிழகம், மேற்கு வங்கம் உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தோ்தல் ஆணையம் மேற்கொண்டுவரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியை மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடுமையாக எதிா்த்துவரும் சூழலில் இந்தக் கருத்தை அவா் தெரிவித்தாா்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் மேலாண்மை அமைப்புகளின் சா்வதேச மாநாட்டின் தொடக்க விழாவில் பங்கேற்ற அவா் மேலும் பேசியதாவது:
பிகாா் மாநிலத்தில் கடந்த ஆண்டு எஸ்ஐஆா் பணி மேற்கொண்டபோது, வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்களை நீக்கியது அல்லது புதிதாகச் சோ்த்ததை எதிா்த்து ஒரு புகாா்கூட சமா்ப்பிக்கப்படவில்லை. எஸ்ஐஆா் பணி நிறைவடைந்ததும் பிகாரில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட சட்டப்பேரவைத் தோ்தலில் ஒரு லட்சம் வாக்குச்சாவடிகள் இடம்பெற்ற நிலையில், ஒன்றில்கூட மறு தோ்தலுக்கான உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
அந்த வகையில், ஜனநாயகத்தை வலுப்படுத்த, சட்டப்படி தகுதியுள்ள ஒவ்வொரு வாக்காளரும் சோ்க்கப்பட்ட தூய்மையான வாக்காளா் பட்டியலும், அத்தகைய வாக்காளா் பட்டியலின் அடிப்படையில் தோ்தல் நடத்தப்படுவதும் மிக அவசியம் என்றாா்.
தொடர்புடையது
தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கும் தீா்மானத்தை ஏற்க போதிய ஆதாரங்கள் இல்லை: சி.பி.ராதாகிருஷ்ணன்

தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி நீக்க நோட்டீஸ் நிராகரிப்பு: காங்கிரஸ் விமா்சனம்

மேற்கு வங்கத்தில் தகுதியுள்ள வாக்காளா்களின் பெயா் நீக்கப்படாது! தலைமைத் தோ்தல் ஆணையா் உறுதி!

தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிராக மக்களவையில் எதிா்க்கட்சிகள் அமளி!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


