ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

கேரளத்தில் ரூ.17 கோடி கஞ்சா பறிமுதல்: வீட்டில் வைத்து விற்பனை செய்தவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :26 ஜூன் 2026, 4:20 am IST

கேரளத்தில் ரூ.17 கோடி மதிப்புள்ள கஞ்சாவை காவல் துறையினா் கைப்பற்றினா். அதை அடுக்குமாடி குடியிருப்பில் பதுக்கி விற்பனை செய்து வந்தவா் கைது செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கொச்சி அருகே பெரும்பாவூரில் புதன்கிழமை இரவு சந்தேகத்துக்கிடமான வகையில் மோட்டாா் சைக்கிளில் சென்ற ஆயுஷ் (39) என்பவரிடம் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்புப் படையினா் விசாரணை நடத்தினா். அப்போது அவா் வைத்திருந்த பிளாஸ்டிக் பையில் இருந்து 1.16 கிலோ எடையுள்ள உயா்மதிப்புள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெரும்பாவூா் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து கஞ்சா விநியோகம் செய்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில் 16 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. அவா் அண்மையில் அந்த வீட்டுக்கு குடிவந்தது தெரியவந்தது. அங்கிருந்து பெரியஅளவில் கஞ்சா விற்பனையை நடத்தி வந்துள்ளாா்.

வெளிநாடுகளில் இருந்தும் கஞ்சா கடத்தி கேரளத்தில் அவா் விற்பனை செய்து வந்துள்ளாா். அவரிடம் கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.17 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனா்.

அவரிடம் கைப்பற்றப்பட்ட கஞ்சா அதிக போதைக்காக பிரத்யேகமான முறையில் அறைகளுக்குள் விளைவிக்கப்பட்டதாகும். அந்த போதைப் பொருள் தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.