கச்சா எண்ணெய் விலை உயர்வால் ப்ரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிப்பால், ப்ரீமியம் ரக பெட்ரோலின் விலையை உயர்த்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ப்ரீமியம் ரக பெட்ரோலான எச்பிசிஎல் எண்ணெய் நிறுவனத்தின் பவர் பெட்ரோல் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எக்ஸ்பி95 பெட்ரோலின் விலையை ரூ. 2 முதல் ரூ. 2.3 வரையில் உயர்த்துவதாக நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்த வகை பெட்ரோல், பொதுவாக என்ஜின் செயல்திறனை மேம்படுத்தவும், அதிக மைலேஜ் வழங்கவும் வடிவமைக்கப்பட்ட எரிபொருள்களே.
மேலும், தொழில்துறை எரிபொருள்களின் விலையும் லிட்டருக்கு ரூ. 21.92 உயர்த்தி, ரூ. 109.56 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தொழில்துறை எரிபொருளின் விலை ரூ. 87.67 என்ற நிலையில் இருந்தது.
இருப்பினும், சாதாரண பெட்ரோல் விலையில் எந்த உயர்வும் இல்லை.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தி வரும்நிலையில், உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்களிக்கும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது.
இதன் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது.
Summary
Premium petrol prices hiked by ₹2
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










