தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மனைவி அளித்த தொடர் தொல்லையால் மன உளைச்சல்: கணவன் விஷம் குடித்து தற்கொலை!

விரக்தியில் மன உளைச்சல் அடைந்த கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கு...

RSS worker dies by suicide in Kerala after being denied BJP ticket; alleged message accuses party leaders

தற்கொலை - ANI

Published On :

மனைவி தொடர் தொல்லை அளித்து வந்த விரக்தியில் மன உளைச்சல் அடைந்த கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கடந்த 3 மாதங்களுக்குப்பின் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் கௌஷாம்பி சுற்றுவட்டாரத்தில் வசித்து வந்த ராம்தேவ் என்பவருக்கும் அவரது மனைவி சவிதா தேவிக்கும் இடையே அடிக்கடி சண்டை எழுந்ததாகக் கூறப்படுகிறது. சவிதா தேவிக்கு அப்பகுதியைச் சேர்ந்த ராமு என்பவருடன் திருமண உறவை மீறி நெருக்கமான பழக்கம் இருந்ததாகவும் அதனை ராம்தேவ் கண்டித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, ராமுவும், சவிதா தேவியும் ராம்தேவை தொடர்ந்து துன்புறுத்தியும் அவரைக் கொன்றுவிடுவதாக மிரட்டியும் அவருக்கு கடுமையான மன வேதனையை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அந்த விரக்தியில் அவர் கடந்தாண்டு டிசம்பரில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார் என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தனது சகோதரர் மரணத்துக்கு அவரது மனைவியே காரணம் என்று அவரது சகோதரர் ரகுநாத் என்பவர் போலீஸில் கடந்த டிசம்பர் 15-இல் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிந்துள்ள போலீஸார், கடந்த டிசம்பர் முதல் தலைமறைவாகியிருந்த சவிதா தேவியையும் ராமுவையும் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 22) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனநல ஆலோசனை தேவைப்படுபவா்கள் 14416, 14417, 104, 1098, 181 ஆகிய உதவி எண்களைத் தொடா்பு கொள்வது அவசியம்.

Summary

Police have arrested a woman and her partner for allegedly abetting the suicide of her husband, officials said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.